மதுரை சர்வதேச விமான நிலையப் பிரகடனம் 7 ஆண்டு கால போராட்டத்திற்குப் கிடைத்த வெற்றி!
14 Mar 2026, 2:57 pm
<p><strong>மதுரை சர்வதேச விமான நிலையப் பிரகடனம் 7 ஆண்டு கால போராட்டத்திற்குப் கிடைத்த வெற்றி!</strong></p>
<p>மதுரை, மார்ச் 14- மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக அங்கீக ரித்திருப்பது, தென் தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரையில் வெள்ளியன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மைல்கல்லை எட்டுவதற்குத் தான் முன்னெடுத்த தொடர் முயற்சிகள் மற்றும் மத்திய அரசின் திட்டமிடல் குறைபாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். உரிமைப் போரும் வரலாற்றுச் சான்றுகளும் “மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் என்பது வெறும் கோரிக்கை அல்ல; அது எங்களது ஏழு ஆண்டு காலத் தொடர் போராட்டம்” என்று சு. வெங்கடேசன் குறிப்பிட்டார். கடந்த 2019-ல் தான் பதவியேற்ற பிறகு, நாடா ளுமன்றத்தில் எழுப்பிய இரண்டாவது உரையே இதுதான் என்பதை நினைவு கூர்ந்தார். முன்னாள் அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைக் குறிப்பிட்ட அவர், “தமிழ்நாடு வழங்கும் வரிப்பணத்திற்கு இணையானது வேறு எந்த மாநிலமும் இல்லை; அதனால் எங்களுக்கு 14 சர்வதேச விமான நிலையங்களைக் கேட்கும் தகுதி இருக்கிறது என்று வாதிட்டோம். வாரணாசியை விட மது ரையில் சர்வதேசப் பயணிகள் அதிகம் என்பதைப் பிரதமரின் முன்னிலை யிலேயே சுட்டிக்காட்டினோம். இந்தப் பாகுபாட்டைத் தகர்க்கவே ஏழு ஆண்டு கள் போராடினோம்” என்றார். மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுடனான நட்பு மற்றும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தென் மாவட்ட எம்.பி-க்களின் கூட்டு முயற்சி யால் ‘24x7’ இயக்கம் மற்றும் சர்வதேச அந்தஸ்து ஆகிய இரண்டு கட்டங்க ளும் சாத்தியமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். மதுரை மெட்ரோ: சுற்றுலா முக்கியத்துவம் புறக்கணிப்பா? மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்துப் பேசிய அவர், 20 லட்சம் மக்கள் தொகை விதியைக் காட்டி மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதைச் சாடி னார். “ஆக்ரா போன்ற நகரங்களுக்கு 20 லட்சம் மக்கள் தொகை இல்லை யென்றாலும், ‘சுற்றுலாத் தலம்’ என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப பட்டுள்ளது. ஆக்ராவை விட ஒன்றரை மடங்கு கூடுதலாக சுற்றுலாப் பயணி கள் அதிகம் வரும் மதுரைக்கு ஏன் அந்த நியாயம் பொருந்தாது?” என்று கேள்வி எழுப்பினார். எரிபொருள் பற்றாக்குறை: மோடி அரசின் விளம்பர அரசியலே காரணம் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்துப் பேசிய சு.வெங்க டேசன், இது திட்டமிடல் இல்லாத மோடி அரசின் தோல்வி என்று விமர்சித்தார். “ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு ஜப்பான் போன்ற நாடுகள் 244 நாட்க ளுக்கான எரிபொருளைச் சேமித்து வைத்துள்ளன. ஆனால், இந்தியாவின் கையிருப்பு வெறும் இரண்டு நாட்க ளுக்கு மட்டுமே போதுமானது. எரி பொருள் சேமிப்புக் கிடங்குகளுக்கு வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்ட விளம்பரத்திற்கு 3,500 கோடி செலவிட்ட அரசு, நாட்டின் அத்தியாவசியத் தேவை யான சேமிப்புக் கிடங்குகளுக்கு அதில் மூன்றில் ஒரு பங்கு கூட ஒதுக்க வில்லை. இந்தப் பற்றாக்குறைக்கு மோடி அரசின் பகட்டு விளம்பரமே காரணம்” என்று அவர் குற்றம் சாட்டி னார். ஏழு ஆண்டுகாலப் போராட்டத் திற்கு மதிப்பளித்து, மதுரை மக்களின் உணர்வுகளை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றியைத் தெரி விப்பதாகக் கூறித் தனது நிறைவு செய் தார். (ந.நி)</p>
