தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கர்ப்பம், பிரசவத்தைக் காரணம் காட்டி பெண்களுக்கு கல்வியை மறுக்கக் கூடாது! மதுரை சட்டக் கல்லூரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

21 Jun 2026, 12:04 am
கர்ப்பம், பிரசவத்தைக் காரணம் காட்டி பெண்களுக்கு கல்வியை மறுக்கக் கூடாது!  மதுரை சட்டக் கல்லூரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கர்ப்பம், பிரசவத்தைக் காரணம் காட்டி பெண்களுக்கு கல்வியை மறுக்கக் கூடாது! மதுரை சட்டக் கல்லூரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 20 – கர்ப்பம், பிரசவம் அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய பொறுப்புகளைக் கொண்டிருக்கும் பெண் களுக்கு, வெறுமனே விதிமுறைகளைக் காரணம் காட்டி கல்வி வாய்ப்பை மறுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரி வித்துள்ளது.

மதுரை சட்டக் கல்லூரியில் எல்.எல்.எம். படித்த மாணவி சங்கீதா, கர்ப்பம் மற்றும் பிரசவக் காலப் பொறுப்புகள் காரணமாகத் தனது இறுதி ஆய்வுக் கட்டுரையை (Thesis) குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் சமர்ப்பிக்க முடியாமல் போனது. இதுதொடர் பான வழக்கிலேயே நீதிபதி ஹேமந்த் சந்தன் கௌடன், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:

மனுதாரர் சங்கீதா, 2020-21 கல்வியாண்டில் எல்.எல்.எம். படிப்பில் சேர்ந்து அனைத்து கோட் பாட்டுத் தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்திருந் தாலும், பாடத் திட்டத்தின் கட்டாய அங்கமான ஆய்வுக் கட்டுரையை குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் சமர்ப்பிக்க முடியவில்லை.

2024 மார்ச் மாதத்தில் கருவுற்ற மனுதாரர் சங்கீதா, அதே ஆண்டு டிசம்பரில் பெண் குழந் தையை பெற்றெடுத்தார். இவ்வாறு கர்ப்பம், பிரச வம் மற்றும் பிறந்த குழந்தையை பராமரிக்கும் பொறுப்புகள் காரணமாக ஆய்வுக் கட்டுரையை காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு மாணவர் படிப்பை முடிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் அதிகாரம் பல்கலைக் கழகத்திற்கு உள்ளது என்றாலும், கர்ப்பமாக இருந்து புதிதாக பிறந்த குழந்தையை பராமரிக் கும் ஒரு பெண்ணை, சாதாரண மாணவருடன் ஒப்பிட முடியாது. கல்வி நிறுவனங்கள் இத்தகைய சூழ்நிலைகளை கையாளும்போது இரக்கம், நியா யம் மற்றும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை யுடன் செயல்பட்டு, தேவையான வசதிகளை வழங்க வேண்டும்.

தாய்மை கல்வியை தொடர்வதற்கும், படிப்பை முடிப்பதற்கும் தடையாக மாறக் கூடாது. கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாக ஒரு மாணவி தனது கல்வி வாய்ப்புகளை இழக்கக் கூடாது. மாணவர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட உயிரியல் மற்றும் சமூக சூழ்நிலைகளை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் கல்வி விதிமுறைகளை பயன்படுத்த இயலாது. இது மாணவர்களுக்கு வெளிப்படை யான அநீதியை ஏற்படுத்தும்போது, நீதிமன்றம் தலையிட முடியும்.

எனவே, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாள ரும், மதுரை சட்டக் கல்லூரி முதல்வரும் இணையவழி கட்டண முறையை வற்புறுத்தாமல், மனுதாரர் நேரடியாக ஆய்வுக் கட்டுரை கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்டதும் ஆய்வுக் கட்டுரையை பெற்றுக் கொண்டு விதிகளின்படி மதிப்பீடு செய்து ஜூன் மாதத்தில் நடைபெறும் வாய்மொழித் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி ஹேமந்த் சந்தன் கௌடன் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கின் தனிப்பட்ட சூழ்நிலை களை கருத்தில் கொண்டு மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இது மற்ற வழக்கு களுக்கு முன்னுதாரணமாக கருதப்படாது என்றும் குறிப்பிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.