அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்திடுக! உயர்நீதிமன்றம் உத்தரவு
17 Jul 2026, 9:44 pm
<p><strong>அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்திடுக! உயர்நீதிமன்றம் உத்தரவு</strong></p><p>மதுரை, ஜூலை 17 - தென்மண்டலத்தில் உள்ள 12 மாவட்ட அரசுப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டி டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தர விட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதி ரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, விருதுநகர், திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி மற்றும் தூத்துக் குடி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பல கட்டி டங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதா கவும், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சேதமடைந்த பள்ளிக் கட்டி டங்கள், கழிப்பறைகள், சமையலறைகள், சுற்றுச்சுவர்கள் மற்றும் அங்கன்வாடி கட்டி டங்களை பழுதுபார்க்கவும், பயன்பாட்டி ற்கு தகுதியற்ற கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் அமைக்கவும், கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதி களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்தி வேல் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், 12 மாவட்டங்க ளின் தலைமை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தங்க ளது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்தும் சுகாதாரம், தூய்மை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான அறிக்கைகளை பெற்று, அவற்றை ஒருங்கிணைத்து தலை மை கல்வி அலுவலர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அறிக்கையில் குடிநீர், வடிகால் வசதி, பள்ளி வளாகத்தில் புதர்கள் அல்லது களை கள் உள்ளனவா உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இந்த அறிக்கையை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தனி அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p>
