தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிஎஸ்பி உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி அஜித்குமார் வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு!

4 Nov 2026, 10:53 pm
டிஎஸ்பி உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி அஜித்குமார் வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு!

டிஎஸ்பி உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி அஜித்குமார் வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு!

மதுரை, நவ. 4 –மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், காவலர் இளையராஜா ஆகியோர் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி முருகன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்ததாகவும், தங்களைக் கைது செய்யக்கூடாது என ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவு பெற்றிருந்ததாகவும் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர், அவர்கள் வெளியே இருந்தால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நான்கு காவல்துறை அதிகாரிகளும் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.