தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோடையைத் தாண்டியும் கொளுத்தும் வெயில்

13 Jul 2026, 10:18 pm
கோடையைத் தாண்டியும் கொளுத்தும் வெயில்
<p><strong>கோடையைத் தாண்டியும் கொளுத்தும் வெயில்</strong></p><p>மதுரை, ஜூலை 13- கோடைகாலம் முடிந்த பிற கும் மதுரையில் வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள் ளது. பசுமைப் பரப்பு குறைவு, நீர்நிலைகள் சீர்கேடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணிகளால் நகரின் வெப்பநிலை தொட ர்ந்து அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வேலூரில் ஜூலை மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்சமான 40.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, திங்க ளன்று 41.6 டிகிரியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில் மதுரையிலும் வெயிலின் தாக்கம் வழக் கத்தை விட நீடித்து வருகிறது. பொதுவாக மதுரையில் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் கோடை வெயில், மே மாதத்தில் உச்சத்தை எட்டும். அக்னி நட்சத்திர காலத்தில் 40 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களிலும் வெயில் குறை யாமல் நீடித்து வருகிறது. தற்போது மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சி யஸாகவும் பதிவாகி வருகிறது. அதிக ஈரப்பதம் காரணமாக உணரப்படும் வெப்பநிலை இதைவிட அதிகமாக இருப்ப தாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சாலை விரிவாக்கப் பணி களுக்காக ஆயிரக்கணக்கான நிழல் தரும் மரங்கள் அகற்றப் பட்ட நிலையில், அதற்கு ஈடாக மரக்கன்றுகள் போதிய அள வில் நடப்படாதது நகரின் வெப் பத்தை அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாக பரா மரிக்கப்படாமல் மாசடைந்தி ருப்பதும், கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக நிலத்தடி நீர் வளம் பாதிக்கப் பட்டிருப்பதும் வெப்பநிலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு அதி கரிப்பதும், மறுசுழற்சி நட வடிக்கைகள் போதிய அளவில் இல்லாததும் சுற்றுச்சூழல் பாதிப்பை மேலும் அதிகரிக்கி றது. இதன் விளைவாக கோடை முடிந்த பிறகும் வெப்பத்தின் தாக்கம் நீடித்து, முதியோர், குழந்தைகள் மற்றும் வெளிப் புறப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிகம் பாதிக் கப்படுகின்றனர். சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை அதிகள வில் நடுதல், வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக உட னடியாக மரக்கன்றுகள் வளர்த்தல், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு மற்றும் மாசு பாட்டிலிருந்து பாதுகாத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தி மறுசுழற்சியை ஊக்குவித்தல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்ப தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படா விட்டால், தமிழகத்தில் அதிக வெப்பம் பதிவாகும் நகரங்களின் பட்டி யலில் மதுரையும் முன்னிலை பெறும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.