கால் எலும்பில் புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனை 15 வயது சிறுமிக்கு மறுவாழ்வு அளித்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை
22 Jul 2026, 9:51 pm

கால் எலும்பில் புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனை 15 வயது சிறுமிக்கு மறுவாழ்வு அளித்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

மதுரை, ஜூலை 22- திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு கால் எலும்பில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரூ.20 லட்சம் வரை செலவாகும் என்றும், காலை அகற்றி செயற் கைக் கால் பொருத்த வேண்டியிருக் கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி மூலம் வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்த மருத்துவர்கள் பொதுமக்க ளின் பாராட்டை பெற்றுள்ளனர்.

கூலித் தொழிலாளர்களான பெற் றோர், மகளைக் காப்பாற்றும் நம்பிக்கையுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மருத்துவர்கள் முதலில் புற்றுநோயின் தன்மையை உறுதி செய்து கீமோதெரபி சிகிச்சை அளித்தனர். பின்னர் பல்துறை மருத்துவர்கள் இணைந்து வலது கால் எலும்பில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி, மருத்துவமனை யில் செயல்பட்டு வரும் எலும்பு வங்கியில் பாதுகாக்கப்பட்டிருந்த எலும்பை பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதன் மூலம் சிறுமியின் காலை அகற்ற வேண்டிய அவசியம் தவிர்க் கப்பட்டதுடன், அவர் மீண்டும் இயல்பாக நடக்கக்கூடிய நிலைக்கு திரும்பியுள்ளார்.

சிறுமி பெருமிதம்

சிகிச்சை பெற்ற சிறுமி கூறுகை யில், “முதலில் உயிரே போய்விடும் என்று பயந்தேன். ஒரு அங்குலம் கூட எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தேன். இப்போது மீண்டும் நடப்பேன் என்ற நம்பிக்கை வந்திருக் கிறது. அரசு மருத்துவமனை மருத்து வர்கள்தான் என் உயிரைக் காப்பாற் றினர். தனியார் மருத்துவமனையில் பணம்தான் முக்கியம் என்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் இங்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழு சிகிச்சையும் அளித்தனர். என் மீது மிகுந்த அக்கறையுடன் கவனம் செலுத்திய அனைத்து மருத்துவர் களுக்கும் நன்றி” என்றார்.

“எலும்பு வங்கிதான் சிறுமியின் காலை காப்பாற்றியது”

மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஸ்குமார் கூறு கையில், “எலும்பு வங்கி இல்லை யென்றால் சிறுமியின் பாதிக்கப்பட்ட கால் எலும்பை முழுமையாக அகற்றி செயற்கைக் கால் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். தற்போது பாதிக்கப்பட்ட எலும்பை மட்டும் அகற்றி, அதற்குப் பதிலாக எலும்பு வங்கியில் பாதுகாக்கப் பட்டிருந்த எலும்பை பொருத்தியுள் ளோம். இதனால் அவரது சொந்தக் காலை காப்பாற்ற முடிந்தது. பிசியோதெரபி முடிந்ததும் அவர் இயல்பாக நடக்கத் தொடங்குவார். அரசு மருத்துவமனைகளில் உலகத் தரமான மருத்துவ வசதிகளும், திறமையான மருத்துவர்களும் உள்ளனர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

2021 முதல் செயல்படும் எலும்பு வங்கி

எலும்பியல் துறைத் தலைவர் டாக்டர் பதியரசு கூறுகையில், “சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவம னையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் எலும்பு வங்கி செயல்பட்டு வரு கிறது. இங்கு சுமார் 200 எலும்பு கள் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டு உள்ளன. ஒருமுறை தானமாக பெறப் படும் எலும்பை 5 ஆண்டுகள் வரை பாதுகாத்து, தேவையான நோயாளி களுக்கு அறுவை சிகிச்சையில் பயன்படுத்த முடியும்” என்றார்.