முதுகலை படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி அரசு ஹோமியோபதி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
16 May 2026, 11:41 pm

முதுகலை படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி அரசு ஹோமியோபதி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதுரை, மே 16- மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் உள்ள, தமி ழகத்தின் ஒரே அரசு ஹோமி யோபதி மருத்துவக் கல்லூரி யைச் சேர்ந்த 250க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்க ணித்து 4-வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக இக்கல்லூரியில் முதுகலை படிப்பிற்கான வகுப்பு களைத் தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் தொட ர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர்.

அத்துடன், கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் என் றும், சித்தா உள்ளிட்ட பிற மருத்துவப் படிப்புகளை முடித்தவர்களுக்கு வழங் கப்படுவது போல, தங்க ளுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண் டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

இதன் மூலம் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாண வர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன் கிழமை முதல் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடங்கி னர்.

போராட்டத்தைத் திசை திருப்பும் வகையில் கல்லூரி நிர்வாகம் 15 நாட்கள் கோடை விடுமுறை அறிவித்த போதி லும், மாணவர்கள் அந்த விடு முறையைப் புறக்கணித் துள்ளனர்.

தங்களது நியாய மான கோரிக்கைகள் நிறை வேறும் வரை போராட்டத் தைக் கைவிடப் போவ தில்லை என்று உறுதியோடு கூறி, கல்லூரி வளாகத்தின் முன்பு 4-வது நாள் போரா ட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.