சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
21 Jul 2026, 9:42 pm
<p><strong>சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>மதுரை, ஜூலை 21- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டம் வடக்கு வட்ட கிளை சார் பில் செவ்வாயன்று கிளைத் தலைவர் ஆர்.கே.சுரேஷ் தலைமையில், “நீட் முறை கேடு மற்றும் கல்வித்துறை யின் சீரழிவுக்கு பொறுப் பேற்க மறுக்கும் மோடி அர சைக் கண்டித்தும், சோனம் வாங்சுக் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப் பாட்டம் புதூர் அருகில் உள்ள மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இரா.தமிழ் துவக்கி வைத்து பேசினார். வட்டக்கிளை செயலாளர் பி.மணிமாறன் கோரிக்கைகளை விளக்கி யும், மாநிலச் செயலாளர் க. நீதிராஜா நிறைவு செய்தும் பேசினர்.</p>
