தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! ஒன்றிய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள்

26 May 2026, 10:44 pm
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! ஒன்றிய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! ஒன்றிய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை, மே 26- பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.

ஒன்றிய அரசின் தவ றான பொருளாதாரக் கொள்கைகளே விலைவாசி உயர்வுக்கு காரணம் எனக் கூறி, மாவட்டத்தின் பல்வேறு வட்டத் தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு வட்டக்கிளை சார்பில் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், மேற்கு வட்டக்கிளை சார்பில் தல்லாகுளம் பொதுப்பணித் துறை வளாகத்தில், வடக்கு வட்டக்கிளை சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மற்றும் தெற்கு வட்டக்கிளை சார்பில் வில்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

மேலும், மேலூர் வட்டக் கிளை சார்பில் நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பும், பேரையூர் வட்டக் கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும், உசி லம்பட்டி வட்டக்கிளை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், வாடிப்பட்டி வட்டக் கிளை சார்பில் அலங்கா நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டத் தலைவர் இரா.தமிழ், மாவட்டச் செயலாளர் க.சந்திரபோஸ், மாவட்டப் பொருளாளர் ஆ.பரமசிவன், மாவட்ட துணைத் தலை வர்கள் த.மனோகரன், ஜெ. மகேந்திரன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள், துறைச் சங்க மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.