தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நுழைவுக்கட்டணம் ரத்து: சு.வெங்கடேசன் எம்.பி தலையீட்டால் நடவடிக்கை!

8 Oct 2026, 2:29 pm
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நுழைவுக்கட்டணம் ரத்து: சு.வெங்கடேசன் எம்.பி தலையீட்டால் நடவடிக்கை!

புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியதை அடுத்து, கட்டண வசூலை நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளிட்டுள்ள செய்திக் குறியிப்பில், “மதுரையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு, கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களிடம் ரூ.20 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக “இந்து தமிழ் திசை” நாளிதழ் செய்தி வெளியிட்டது.

போராட்டத்திற்காக தில்லி சென்றிருந்த நிலையில், செய்தி அறிந்ததும் காந்தி அருங்காட்சியகச் செயலாளரிடம் தொலைபேசியில் பேசி எனது கண்டனத்தைத் தெரிவித்தேன். உடனடியாக இந்த நுழைவுக்கட்டண வசூல் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

நிர்வாகிகளிடம் பேசிவிட்டுப் பதிலளித்த அவர், “இனி நுழைவுக்கட்டணம் இல்லை” என்பதைத் தெரிவித்தார். மேலும், காந்தி அருங்காட்சியகம் பற்றிய நூல் தேவைப்படுவோர் அதனை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றும், அதற்கும் நுழைவுக்கட்டணத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுத் திறக்கப்பட்டதையொட்டி, இதற்கு முன் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பார்வையிட வருவதை மகிழ்வோடு கடந்த வாரம் பதிவு செய்தேன்.

“தேவை அதிகரிக்கும் போது விலையை அதிகரிக்கும் செயல் வணிக நிறுவனங்களுடையது. அருங்காட்சியகமோ, அறக்கட்டளையோ வணிக அமைப்பல்ல; இதனை நிர்வாகிகள் உணர வேண்டும். காந்தி அருங்காட்சியக அறக்கட்டளை இது போன்ற விமர்சனங்களுக்கு ஆளாகுவது அழகல்ல.

கடந்த காலத்தில் அருங்காட்சியக வளாக இடத்தை ஓட்டல் மற்றும் பழச்சாறு கடைகளுக்கு வாடகைக்கு விட்டதை எதிர்த்து, கடுமையான நடவடிக்கைக்குப் பிறகு அவற்றை அப்புறப்படுத்தினோம் என்பதையும் இங்கே நினைவுகூறுகிறேன்.

தென் இந்தியாவின் ஒரே காந்தி அருங்காட்சியகம் ரூ.10.25 கோடி செலவில் இப்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறந்த நிகழ்வைத் தொடர்ந்து, அண்ணலின் நினைவையும், வாழ்வையும், செயலையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பெரு வாய்ப்பாக இதனை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.