தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையின் அடையாளமான மீன் சிலையை மீண்டும் அமைத்திடுக! தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

29 May 2026, 10:16 pm
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையின் அடையாளமான  மீன் சிலையை மீண்டும் அமைத்திடுக! தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையின் அடையாளமான மீன் சிலையை மீண்டும் அமைத்திடுக! தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

மதுரை, மே 29 – மதுரையின் அடையாளமாக விளங்கிய மீன் சிலையை மீண்டும் அமைப்பதற்கான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அளந்து ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் வெள்ளியன்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.

ஜெகதீசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மதுரையின் அடையாளமான மீன் சிலைகள் மதுரை ரயில் நிலையத்தில் 1998-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன. மூன்று டன் எடையுடைய பித்தளை உலோகத்தில், மூன்று மீன்கள் நீரூற்றில் துள்ளி விளையாடுவது போன்ற வடிவில் 15 அடி உயரத்தில் இந்த சிலை நிறுவப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த 22 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

பின்னர் 2021-ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளின் போது சிலைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதற்கிடையில், தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், மீன் சிலையை மீண்டும் அமைப்பது தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அடங்கிய குழு, மதுரை கட்டபொம்மன் சிலை அருகே மாநகராட்சி மண்டலம்-3 பகுதியில் உள்ள மாநகராட்சி சுற்றுலா மைய வளாகத்தின் முன்புறத்தில் மீன் சிலையை அமைக்க அனுமதி வழங்கியது. மேலும், இதற்கான பணியாணை கடந்த ஜனவரி 26-ஆம் தேதி வழங்கப்பட்டது.

அதன்படி ரூ.40 லட்சம் செலவில் நீரூற்றுகளுடன் கூடிய மீன் சிலையை அமைக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தயாராக உள்ளது.

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் சிலை அமைக்க வேண்டிய இடத்தை முறையாக அளந்து ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பான செயலாகும். எனவே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக இடத்தை அளந்து ஒதுக்கி, மீன் சிலையை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.