மதுரையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கிடுக! மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு
9 Oct 2026, 11:23 pm

மதுரையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கிடுக! மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு

மதுரை அக் 9-மதுரை மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டச்செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவ மழையும், தற்பொழுது பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழையும் போதுமான அளவில் பெய்யவில்லை. இதனால் மதுரை மாவட்டத்தின் பாசனத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் பெரியார் மற்றும் வைகைஅணைகளில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. போதிய நீர் இல்லாத காரணத்தினால் இந்த ஆண்டு ஜூன்மாதம் திறக்கப்பட வேண்டிய முதல் போகத்திற்கான தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பெரியார் 9-வது பிரிவு வாய்க்கால் வரை உள்ள 45,000ஏக்கர் இருபோக நிலங்களில் விவசாயப் பணிகள்முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட வேண்டிய பெரியார் தண்ணீர் திறக்கப்படாததால், பெரியார் கடைமடை வரை உள்ள 1,06,000 ஏக்கர் ஒருபோக நிலங்களிலும் அக்டோபர் மாதம் வரை விவசாயப் பணிகள் தொடங்கவில்லை. இதனால் இப்பகுதியில் இனி மழைபெய்து இந்த ஆண்டு சாகுபடிநடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. மேலும், போதுமான மழையின்மை மற்றும் எல்-நினோ தாக்கம் காரணமாக மாவட்டத்தின் புஞ்சைநிலங்களில் செய்யப்படும் மானாவாரி விவசாயம்முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மா, தென்னை, கொய்யா மரங்களும் தண்ணீர் இன்றி காய்ந்துசாகுபடி செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மழையின்மை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்டகண்மாய்களும் குளங்களும் தண்ணீர் இன்றி வறண்டு கட்டாந்தரையாக மாறியுள்ளன. மேலும், கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் பம்புகளிலும் நிலத்தடி நீர் குறைந்ததால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மாவட்டமாகவும், வேறு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில்கள் எதுவும்இல்லாத நிலையிலும் உள்ளது.எனவே, மதுரை மாவட்டவிவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும், பொதுமக்களையும் மற்றும் கால்நடைகளையும் பாதுகாக்கும் பொருட்டு, மதுரை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கும், வேலையின்றி தவிக்கும்விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணங்களை வழங்கி பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நேர்முகஉதவியாளரிடம் மனு அளிக்கபட்டது. இந்த மனு அளிக்கும் நிகழ்வில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, மாவட்ட செயலாளர்எஸ்.பி.இளங்கோவன், மாவட்ட நிர்வாகிகள் பி.எஸ்.ராஜாமணி , பி.நாகேந்திரன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அதனை மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக அரசுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பப்பட்டு உரிய நவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.மேலும் இது சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் கூறுகையில் , மதுரை மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணப் பணிகளைத் தொடங்க வேண்டும்.இல்லையெனில் வறட்சி நிவாரணப் பணிகளைத் தொடங்க கோரியும் தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும்,பயிர்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யவும் கோரி அக்டோபர் 21 அன்று மதுரை மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களில் இடதுசாரி விவசாய சங்கங்களை இணைத்து சாலை மறியல் போராட்டம்நடத்தப்படும் என்று தெரிவித்தார்.