தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரையில் கடை வீதிகளில் குவிந்த மக்கள்! விலைவாசி உயர்வால் தீபாவளி கொண்டாட்டத்திலும் சிக்கனம் - ஜெ. பொன்மாறன்

1 Nov 2026, 8:49 pm
மதுரையில் கடை வீதிகளில் குவிந்த மக்கள்!  விலைவாசி உயர்வால் தீபாவளி கொண்டாட்டத்திலும் சிக்கனம் -  ஜெ. பொன்மாறன்

மதுரையில் கடை வீதிகளில் குவிந்த மக்கள்! விலைவாசி உயர்வால் தீபாவளி கொண்டாட்டத்திலும் சிக்கனம்

மதுரை, நவ. 1தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மதுரையில் புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும்பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மாசி வீதிகள், நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில்மக்கள் கூட்டம்அதிகரித்துக் காணப்பட்டது.

சாலையோரக் கடைகளுக்கு வரவேற்புமதுரை பசுமலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, நேதாஜி சாலையில் உள்ள சாலையோரக் கடையில் சுடிதார்வாங்கிக் கொண்டிருந்த போது பேசுகையில், “பெரிய ஜவுளிக் கடைகளுடன் ஒப்பிடும்போது சாலை யோரக்கடைகளிலும் நல்ல தரமான ஆடைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஏற்கெனவே இங்கு வாங்கியஆடைகளை அணிந்து பார்த்தபோது தரமாகவும், பிடித்த வகையிலும் இருந்தன. இதனால் மீண்டும் இங்கு வந்து சுடிதார் வாங்குகிறேன். குறைந்த விலையில் நல்ல ஆடைகள்கிடைப்பதால் சாலையோரக் கடைகளைத் தேர்வு செய்கிறோம்” என்றார்.

விலை உயர்வால் செலவு அதிகரிப்புமதுரை காளவாசல் பகுதியில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் மளிகைப் பொருட்கள் வாங்கியகுடும்பத்தலைவி ஜானகி பேசுகையில், “கடந்த மாதம்வாங்கிய இட்லி அரிசி விலை, இந்த மாதம் கிலோவுக்கு ரூ. 18 வரை உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கே கடந்த மாதத்தைவிட இந்த மாதம் சுமார் ரூ. 1,000 கூடுதலாகச்செலவாகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

முன்பெல்லாம் தீபாவளி போனஸ் கிடைத்தால்வீட்டிற்குத் தேவையான ஏதாவது ஒரு பொருளை வாங்குவோம். ஆனால், தற்போது மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கே தீபாவளி போனஸ் முழுவதும் செலவாகிவிடும் நிலை உள்ளது. புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட மற்ற செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.மாத துவக்கத்தில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லைமதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே சாலையோ ரத்தில் தற்காலிகக் கடை அமைத்து துணி விற்பனைசெய்து வரும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஹனிபா பேசுகையில், “பாலக்காட்டில் இருந்து மதுரைக்கு வந்து ஒரு வாரம்தற்காலிகமாகக் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். பேண்ட், சட்டை, டிரவுசர்உள்ளிட்டஆடைகளைப் பெரிய கடைகளைவிடக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். ரூ. 250 முதல் ரூ. 500 வரை

பல்வேறு வகையான ஆடைகள் விற்பனைக்குஉள்ளன.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. பலர் கடைக்கு வந்து ஆடைகளைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். துணிகள் நன்றாக இருப்பதாகக் கூறினாலும், நாளையும் கடை இருக்குமா என்று கேட்கின்றனர். தீபாவளி வரை கடைஇருக்கும் எனத் தெரிவித்து வருகிறோம். மாதத்தின் முதல் தேதியாக இருந்தாலும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவில்லை. தீபாவளிநேரத்தில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்தால் விற்பனை சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.சாலையோரக் கடைகளுக்கு முன்னுரிமைபாலமேடு பகுதியைச் சேர்ந்த நந்தினி பேசுகையில், “பெரிய கடைகளில் பொருட்களை வாங்கும்போது விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். ஆனால், சாலையோரக் கடைகளில் வியாபாரிகளிடம் பேரம் பேசி ஓரளவு குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடிகிறது.

இதனால் எங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தினர் சாலையோரக் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம்” என்றார்.சாமானியர்கள் ஆர்வம்சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த லட்சுமி பேசுகையில், “பெரிய கடைளில் கம்பளி உள்ளிட்ட வெப்ப ஆடைகளை வாங்கினால் ரூ. 1,500 வரை விலைகூறுகின்றனர். அதே போன்ற ஆடையைச் சாலை யோரக் கடையில் ரூ. 500-க்கு வாங்கியுள்ளேன். எங்களைப்போன்ற சாமானிய மக்களுக்கு இதுபோன்ற சாலையோரக் கடைகள்தான் பெரிதும் உதவியாக உள்ளன. பெரிய கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையில் பொருட்களை வாங்க முடியாததால், குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களைத் தேடிச் செல்கிறோம்” எனக்கூறினார்.

பேன்சி பொருட்கள் ரூ. 10 முதல் விற்பனைமதுரை தெற்கு கோபுரம்அருகே புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘நியூ குயின் பேன்சி ஸ்டோர்’ உரிமை யாளர் சிவா பேசுகையில், “பெண்களுக்குத் தேவை யான அழகுசாதனப் பொருட்கள், கைப்பைகள், கவரிங் நகைகள், கைக்கடிகாரங்கள், மாடல் தோடுகள்,ஹேர்பின்கள், தலை அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மொத்தமாகவும் சில்லறை யாகவும் விற்பனைசெய்யப்படுகின்றன.

கவரிங் நெக்லஸ்கள் ரூ. 50 முதல் ரூ. 500 வரையிலும், கைக்கடிகாரங்கள் ரூ. 100 முதல் ரூ. 300 வரையிலும், மாடல் தோடுகள் ரூ. 10 முதல் ரூ. 300 வரையிலும், ஹேர்பின்கள் மற்றுமதலை அலங்காரப் பொருட்கள் ரூ. 10 முதல் ரூ. 100 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தை களுக்கான விளையாட்டுப் பொம்மைகள் ரூ. 50 முதல் ரூ. 1,000 வரை கிடைக் கின்றன. பெண்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.

கிப்ட் பாக்ஸ்களுக்கு தனி வரவேற்புதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையும் தொடங்கியுள்ளது. சிவகாசியில் பட்டாசுஉற்பத்தி குறைந்துள்ள தால், இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை கடந்த ஆண்டைவிட உயர்ந்துள்ளதாக விற்பனைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு உற்பத்தி சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாகவும், மூலப்பொருட் களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு விலையை சுமார் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாகவும் உற்பத்தி யாளர்கள் தரப்பில் தெரி விக்கப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கும் பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் பல்வேறு வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. பட்டாசுகளின் எண்ணிக்கைமற்றும் வகைகளைப் பொறுத்து விலை மாறுபடுகிறது. 22 வகை பட்டாசுகள் கொண்ட பெட்டி ரூ. 330 முதலும், 60 வகை பட்டாசுகள் கொண்ட பெட்டி ரூ. 1,300 வரையிலும்விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வால் சிக்கனமாகக் கொண்டாடும் மக்கள்ஒருபுறம் மளிகைப் பொருட்கள், எண்ணெய், நெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு; மறுபுறம்புத்தாடைகள், பட்டாசுகள்,இனிப்புகள் என தீபாவளிக்கான கூடுதல் செலவுகள் என நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பத்தினருக்கு இந்த ஆண்டு பண்டிகை பொருளாதாரச் சுமையாக மாறி யுள்ளது.

இதனால் பெரிய ஜவுளிக் கடைகள் மற்றும் வணிகவளாகங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் சாலையோரக் கடைகளில் பொதுமக்கள் அதிகஆர்வத்துடன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.மகிழ்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடப் படும் தீபாவளிப் பண்டிகையைக்கூட விலைவாசிஉயர்வுக்கு மத்தியில் சிக்கனமாகக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குடும்பத் தலைவிகள் தெரிவித்தனர்.- ஜெ. பொன்மாறன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.