மதுரை புறநகரில் 427 சந்தாக்கள் ஒப்படைப்பு!
23 Jul 2026, 8:54 pm
<p><strong>மதுரை புறநகரில் 427 சந்தாக்கள் ஒப்படைப்பு!</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட - 427 தீக்கதிர் சந்தாக்களை, தீக்கதிர் முதன்மைப் பொதுமேலாளரும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான என். பாண்டியிடம், மதுரை புறநகர் மாவட்ட தீக்கதிர் பொறுப்பாளர் வி.பி. முருகன் வழங்கினார். இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா, த. செல்லக்கண்ணு, தீக்கதிர் மதுரை பதிப்பு பொதுமேலாளர் ஜோ. ராஜ்மோகன் மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
