தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணியில் தனியார்மயத்தைக் கைவிடுக! மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

21 Jul 2026, 9:41 pm
தூய்மைப் பணியில் தனியார்மயத்தைக் கைவிடுக! மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தூய்மைப் பணியில் தனியார்மயத்தைக் கைவிடுக! மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>மதுரை, ஜூலை 21- உள்ளாட்சி அமைப்பு களில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் நட வடிக்கைகளை கைவிட வலி யுறுத்தி, மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) முனிச்சாலையில் செவ் வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில், உள் ளாட்சி அமைப்புகளில் தூய் மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக் கும் நடவடிக்கையை தமி ழக அரசு உடனடியாக கை விட வேண்டும் என்றும், தூய் மைப் பணிகளை தனியார் மயமாக்க வழிவகுக்கும் அர சாணை எண் 152-ஐ உடனடி யாக திரும்பப் பெற வேண் டும். மேலும், தூய்மைப் பணி யாளர்களின் வேலை வாய்ப்பு பாதுகாப்பு, வாழ் வாதார உரிமை மற்றும் நிரந் தரப் பணியமர்த்தலை உறுதி செய்யும் வகையில் அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் குப்பை பரா மரிப்பு மற்றும் அகற்றுவதில் மிகப்பெரும் மோசடியில் ஈடு பட்ட ஒப்பந்த நிறுவனமான அவர்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் என்.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக் குழு உறுப் பினர் இரா.தெய்வராஜ் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் கருப்பசாமி, மாவட்ட நிர் வாகிகள் சீதாலட்சுமி, வைர மணி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை விளக்கிப் பேசி னர். சிஐடியு மாவட்டச் செய லாளர் இரா.லெனின் நிறைவு செய்து பேசினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எஸ். சந்தியாகு, பா.பழனியம் மாள், வி.அழகுமலை, செந் தாமரைக்கண்ணன் உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.