தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10 ஆண்டுப் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி மதுரை மாநகராட்சியில் தனியார்மயத்தைப் படிப்படியாகக் கைவிடுவதாக அரசு உறுதி

8 Oct 2026, 11:04 pm
10 ஆண்டுப் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி மதுரை மாநகராட்சியில் தனியார்மயத்தைப் படிப்படியாகக் கைவிடுவதாக அரசு உறுதி

10 ஆண்டுப் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி மதுரை மாநகராட்சியில் தனியார்மயத்தைப் படிப்படியாகக் கைவிடுவதாக அரசு உறுதி

மதுரை, அக். 8 -மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துபிரிவுத் தொழிலாளர்களின் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 5 அன்று தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தம், நான்கு நாட்களுக்குப் பிறகு வியாழக்கிழமை (அக்.8) மதுரை மாநகராட்சியில் திரும்பப் பெறப்பட்டது.

சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம்,தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், விசிக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தின் மூலம் கிடைத்த உறுதிமொழிகள் குறித்து, சிஐடியு சங்க மாவட்டப் பொதுச் செயலா ளர் ம. பாலசுப்பிரமணியன்செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார்.

10 ஆண்டு ஊதியப் போராட்டத்துக்கு வெற்றி

2017-இல் வெளியிடப் பட்ட குறைந்தபட்ச ஊதியஅரசாணை 62.2டி அடிப்படையில் ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை யைத் தொழிலாளர்கள் 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். தற்போதையஊதியத்தைவிட சம்பந்தப் பட்ட மாநகராட்சி/நகராட்சியில் அதிக ஊதியம் வழங்கப்பட்டால் அதையும், மாவட்டஆட்சியர் நிர்ணயிக்கும் ஊதியம் அதைவிட அதிகமாக இருந்தால் அதையும் வழங்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. இது 10 ஆண்டுப் போராட்டத்துக்குக் கிடைத்த முக்கிய முன்னேற்றமாகும்.

நகராட்சிகளில் தனியார்மயம் படிப்படியாகக் கைவிடல்

தூய்மைப் பணிகளில் தனியார்மயத்தைக் கைவிட்டு அனைத்துத் தொழிலாளர்களையும் நிரந்தரப் படுத்த வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கைக்கு, தனியார்மயத்தைப் படிப்படியாகக் கைவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. முதற்கட்டமாக, நகராட்சிகளில் உள்ள தனியார் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்களை அடுத்த ஒரு மாதத்துக்குள் வெளியேற்றி, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் தொழிலாளர்களை அரசின் நேரடிக் கண்காணிப்பில் பணியமர்த்தும் நடைமுறை கொண்டுவரப்படும். அடுத்த கட்டமாக மாநகராட்சிகளிலும் இதே நடைமுறையைக் கொண்டுவர அரசு பரிசீலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை 152-க்கு மாற்றாகப் புதிய நடைமுறை

திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பான அரசாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்வதற்குப் பதிலாக, 2022 அரசாணை 116-இல் தேவையான திருத்தங்களைச் செய்து புதிய நடைமுறை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. புதிய நடைமுறையில் குறைந்தபட்ச ஊதியம், பணிப்பாதுகாப்பு, பிஎப், இஎஸ்ஐ, ஓய்வூதியம், போனஸ் உள்ளிட்ட நல உரிமைகளை நிர்வாகக் கண்காணிப்பின் கீழ் உறுதி செய்யும் ஒப்பந்த விதிமுறைகள் உருவாக்கப்படும். தனியார் நிறுவனங்களுக்குக்குப்பையின் எடை அடிப்படையில் பணம் வழங்கும் முறைக்குப் பதிலாக, பணியாளர் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான ஊதிய அடிப்படையில் ஒப்பந்தத் தொகை நிர்ணயிக்கப்படும்; ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் போனஸ் உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்யும் விதிமுறைகள் ஒப்பந்தங்களி லேயே சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

காலமுறை ஊதியம், தினக்கூலி, பணிப் பாதுகாப்பு

தமிழ்நாடு முழுவதும் தொகுப்பூதியம் உள்ளிட்ட முறைகளில் பணியாற்றும் சுமார் 2,600 பணியாளர்களைக் காலமுறை ஊதியத்தில் கொண்டுவர நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாகவும், அதற்கான நிதி கிடைத்தவுடன்அமல்படுத்தப்படும் எனவும் அரசு உறுதி அளித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் சுமார் 650 தினக்கூலிதொழிலாளர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தீர்ப்பு வந்தவுடன் உடனடியாக அமல்படுத்தப்படும் எனவும், வழக்கில்இடம்பெறாத தினக்கூலித் தொழிலா ளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்தும்பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டது.பாதாள சாக்கடைப் பணியாளர்கள் உள்ளிட்ட பொறியியல் பிரிவுத் தொழிலாளர் களுக்குப் பணிப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், உபகரணங்கள்,காப்பீடு உள்ளிட்ட சமூக நலப்பயன்களை வழங்க, அடுத்த ஒரு வாரத்துக்குள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்தார். டிபிசி பணியாளர்களுக்குத் தற்போதைய சம்பள உயர்வு பொருந்துவதுடன், அவர்களை நிரந்தரப்படுத்தவும் மூன்று சங்கங்களும் தொடர்ந்துவலியுறுத்தும்.

எழுத்துப்பூர்வ உறுதிமொழி; ஆணையருக்குப் பாராட்டு

கடந்த காலப் பேச்சுவார்த்தைகளில் உறுதிமொழிகள் மட்டுமே கிடைத்த நிலையில், இம்முறை நகராட்சி நிர்வாக

இயக்குநர் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழிகளை வழங்கியிருப்பது போராட்டத்தின் முக்கிய வெற்றி எனச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தியமாநகராட்சி ஆணையர் கௌரவ் குமாருக்கு அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். அனைத்துக் கோரிக்கைகளும்நிறைவேறா விட்டாலும், ஊதிய அரசாணை, தனியார் மயக் குறைப்பு, நல உரிமைகளை உறுதி செய்யும் ஒப்பந்த மாற்றம், ஓய்வூதியம்உள்ளிட்ட அம்சங்களில் கிடைத்த உறுதிமொழிகள் சாதகமான முன்னேற்றங்கள் என்றனர்.

போராட்டத்தில் சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கருப்பசாமி, செயல் தலைவர் ரவி, சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் பட்டன், மாநிலப்பொதுச் செயலாளர் அம்சராஜ், உதயசூரியன், மாடசாமி; விசிக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஏ. போஸ், நிதிக்குழுத் தலைவர் டிபிஐ முத்து, முருகன்,நெடுஞ்செழியன், காமராஜ்உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது மதுரைக்கு மட்டுமல்ல, தமிழ்நாடுமுழுவதும் உள்ள உள்ளாட்சித் தொழிலா ளர்களின் உரிமைப் போராட்டமாக .

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.