தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றிடுக! அக்.5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

1 Oct 2026, 10:46 pm
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றிடுக! அக்.5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றிடுக! அக்.5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மதுரை, அக்.1-மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் மேம்பாட்டு சங்கம், விசிக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகிய 3 சங்கங்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் வியாழக் கிழமை நடைபெற்றது.

அவர்லேண்ட் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்

தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசாணைகள் 152, 139-ஐ ரத்து செய்ய வேண்டும், மதுரை மாநகராட்சிக்கும் அவர் லேண்ட் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தைப் புதுப் பிக்காமல் அந்நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நிரந்தரம் செய்திடுக!

மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். எல்சிவி, இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களை நிரந்தரம் செய்ய வேண் டும். பாதாளச் சாக்கடை மற்றும் பிட்டர் மஸ்தூர் பணியாளர்களை நிரந்தரம்செய்வதுடன், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்க வேண் டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டது.குடிநீர், பம்பிங் ஸ்டேஷன் பணியாளர்கள், டிபிசி பணியாளர்கள், அனிமேட்டர்கள், தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், சரண்டர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும்அமல்படுத்த வேண்டும், கொரோனா காலத்தில் அறிவிக்கப் பட்ட ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணிபுரியும் அனைவருக்கும் 8.33 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.போராட்டத்துக்கு சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கமாவட்டபொதுச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் தலை

மை வகித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காலவரையற்ற வேலைநிறுத்தம்

உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் கள், ஓட்டுநர்கள், பாதாளச் சாக் கடை, டிபிசி, குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரிவு தொழிலாளர் களையும் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அக்.5முதல் தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கான வேலைநிறுத்த அறிவிப்பு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.2 ஆண்டுகள் பணி முடித்துள்ள உள்ளாட்சி பணியாளர்களை நிரந் தரம் செய்ய வேண்டும். அவர்கள் நிரந்தரம் செய்யப்படும் வரை தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங் களை ரத்து செய்து, மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும். மதுரை மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தூய்மைப் பணியை மேற்கொண்டு வரும் அவர்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்றார்.

வேலைவாய்ப்பு பாதிப்பு அபாயம்

மேலும், மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.2,400 கோடி மதிப்பில் தனியார் பங்களிப்புடன் செயல் படுத்தப்பட உள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்தை கைவிட வேண்டும். இத்திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் பாதாளச் சாக்கடை, குடிநீர், பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 1,200 முதல் 1,400 தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தூய்மைத் தொழிலாளர் களின் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவோம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இப்போராட்டத் தில் தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் மேம்பாட்டு சங்கத் தலைவர் பட்டன், மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், உதயசூரியன், மாடசாமி, விசிக தொழிலாளர் முன் னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.போஸ்,மாநில நிதிக் குழுத் தலைவர் டிபிஐ முத்து, மாவட்ட நிர்வாகிகள் முருகன், நெடுஞ்செழியன், காமராஜ், சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கருப்பசாமி, செயல் தலைவர் ரவி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் இரா.தெய்வராஜ், மாவட்டப் பொருளாளர் ஜே.லூர்துரூபி உள்ளிட்ட 4,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுகோரிக்கை மனு அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.