மாநகராட்சி முறைகேடுகள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
6 Jun 2026, 10:47 pm

மாநகராட்சி முறைகேடுகள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

அமைச்சர் நிர்மல்குமார் உறுதி மதுரை, ஜூன் 6- மதுரை மாநகராட்சி முறைகேடுகள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சனிக் கிழமை அமைச்சர் நிர்மல்குமார் தலைமை யில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையா ளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர், மதுரை மாநக ராட்சியின் சில பகுதிகளில் கழிவுநீர் வெளி யேற்றம் தொடர்பான தற்காலிக திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரி வித்தார். மேலும், மாநகராட்சியில் நடை பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இணைந்து முழு மையான ஆய்வு மேற்கொண்டு வரு வதாகவும், அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு கணக்கிடப்பட்டு, பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மாநகராட்சி முறைகேடுகள் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சட்ட விரோதமாக பார்கள் செயல்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கையுடன் வழக்குகளும் பதிவு செய்யப்படும் என எச்சரித்தார்.