போலிக் குப்பை!
6 May 2026, 8:53 pm

போலிக் குப்பை!

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியை தனியாருக்கு தருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளன. தூய்மைப் பணியை நிரந்தரப் பணி யாளர்களை கொண்டு உள்ளாட்சி நிர்வாகங் கள் நேரடியாக மேற்கொள்வதுதான் பொருத்த மாக இருக்கும்.

ஆனால் சென்னை, மதுரை உட்பட பல்வேறு மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புக ளில் தூய்மைப் பணி தனியாருக்கு தரப்பட்டது. வெளிமுகமை என்ற பெயரில் செய்யப்படும் இந்த ஏற்பாடு அப்பட்டமான சுரண்டலாகும். தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. எந்தவித மான சட்ட, சமூகப் பாதுகாப்பும் இல்லை. பணிப் பாதுகாப்பு என்பது இல்லவே இல்லை. எந்த நேரமும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்துடனேயே இந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

சென்னை, மதுரை உட்பட தூய்மைப் பணி யாளர்கள் மிகத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர். பழிவாங்கல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்த தொழிலா ளர்கள் எதிர்கொண்டனர்.

இந்தநிலையில், தூய்மைப் பணியாளர்களை சுரண்டுவது மட்டுமின்றி மிகப் பெரிய மோசடி யிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மதுரை மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனத்திலும் மதுரை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இந்நிறுவனத்திற்கு மாதந்தோறும் சுமார் 15 கோடி வழங்கப்படுகிறது.

இந்நிறுவனம் குப்பைக்கு பதிலாக கற்கள் மற்றும் மண்ணை அள்ளிப் போட்டு போலியாக எடையைக் காட்டி மோசடி செய்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதற்காக அபரா தம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒருபக்கம் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவது மறுபுறத்தில் போலியாக எடை யைக் காட்டி ஏமாற்றுவது என்பது நடந்துள்ளது. இது மதுரை மாநகராட்சியில் மட்டும் தான் நடந்துள்ளது என்று கூற முடியாது. தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்தால் இதுதான் நிலையாக இருக்கும்.

எனவே மாநிலம் முழுவதும் தனியார் நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ள தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்களே நிரந்தரப் பணியாளர்களை அமர்த்தி தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணி மட்டுமின்றி அனைத்துப் பணிகளிலும் வெளி முகமை என்ற மோசடி முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.