தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கால்வாய் தூர்வாருதல், மாநகராட்சி வருவாய் உயர்வு...

30 May 2026, 10:14 pm
கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கால்வாய் தூர்வாருதல், மாநகராட்சி வருவாய் உயர்வு...

கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கால்வாய் தூர்வாருதல், மாநகராட்சி வருவாய் உயர்வு...

மதுரை மாநகராட்சி பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி கூடுதல் தலைமைச் செயலாளரிடம் பொறுப்பு மேயர் மனு

மதுரை, மே 30- மதுரை மாநகராட்சியில் நீண்டகால மாக நிலவி வரும் பல்வேறு அடிப்படை பிரச்ச னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன் விரிவான மனுவை அளித்துள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, மதுரை மாநகராட்சியின் நிர்வாகம், சுகாதாரம், வருவாய், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்ச னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமைச் செய லாளர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுத் திறனில் செயல்பட வேண்டும் அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ள 125 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், அதன் முழுத் திறன் பயன் படுத்தப்படவில்லை என்று மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மாதந்தோறும் சுமார் ரூ.15 லட்சம் மின்சார செலவு செய்யப்பட்டு வரும் நிலையில், கழிவுநீரின் ஒரு பகுதி நேரடியாக கீரைத் தோட்டங்களுக்கு திருப்பிவிடப்படுவதாகவும், குறைந்த அளவு மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

. எனவே, அனைத்து கழிவுநீரையும் முழு மையாக சுத்திகரித்து மாற்றுப் பயன் பாட்டிற்கு கொண்டு வருவதோடு, மீதமுள்ள நீரை அருகிலுள்ள கண்மாய்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மையில் முறைகேடு வெள்ளக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிக்காக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், இயந்திரங்கள் செயல்படாமல் கிடப்பில் இருப்பதாக மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் கை களால் குப்பைகளை பிரிக்கும் நிலை தொடர்வதாகவும், குடியிருப்பு பகுதி களுக்கு அருகில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதாகவும் குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ள மனு வில், குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை விரைவாக செயல் படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

3 முக்கிய கால்வாய்களை தூர்வார கோரிக்கை மழைக்காலத்திற்கு முன்பாக மாநக ராட்சிக்கு உட்பட்ட 13 முக்கிய கால்வாய் களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட் டுள்ளது.

மழைநீர் மற்றும் உபரி நீர் தடை யின்றி வெளியேறுவதற்கு இது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி மங்கம்மாள் சத்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தல் மதுரையின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ராணி மங்கம்மாள் சத்திரத்தை பாது காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அருகிலிருந்த கருப்பட்டி சத்தி ரம் முறையான அனுமதியின்றி இடிக்கப்பட்ட தாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குச் சொந்தமான வர லாற்றுக் கட்டிடங்களில் மாநகராட்சியே பரா மரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாடகைதாரர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள அனுமதிக் கக் கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்க வேண்டும் மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப் படாமல் உள்ள தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வருவாயை உயர்த்த பரிந்துரைகள் மாநகராட்சியின் வருவாயை அதி கரிக்கும் வகையில் பல்வேறு பரிந்துரை களும் மனுவில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசுத் துறைகளின் குடியிருப்புகள், நீதி மன்ற வளாகங்கள், விளையாட்டு அரங்கு கள், மத்திய கிடங்கு கழக கட்டிடங்கள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு சேவை வரி மற்றும் பிற கட்டணங்கள் முறையாக விதிக்கப்பட வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2015 முதல் 2022 வரை கட்டப் பட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படாமல் இருப்பதாக வும், குடிசை மாற்றுத் திட்டத்தின் கீழ் அனு மதி பெற்ற பல கட்டிடங்கள் இன்னும் வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், நட்சத்திர ஓட்டல்கள், குளி ரூட்டப்பட்ட திருமண மண்டபங்கள் மற்றும் உயர்தர மருத்துவமனைகளுக்கு அரசா ணைப்படி விதிக்கப்பட வேண்டிய உயர்ந்த பட்ச வரி வசூலிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.3,922 கோடி மதிப்பிலான தணிக்கைத் தடைகள் நிலுவை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் அறிக்கையின்படி, மதுரை மாநகராட்சியில் 12,689 தணிக்கைத் தடைகள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,922.72 கோடி எனவும் மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்த தணிக்கைத் தடைகளை விரைந்து தீர்த்தால் மாநகராட்சிக்கு கணிசமான வரு வாய் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி, நிர்வாக மேம்பாடு மற்றும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டுள்ளதாக பொறுப்பு மேயர் தி.நாக ராஜன் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.