தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

5 ஆண்டு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக! சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை வலியுறுத்தல்

23 May 2026, 10:28 pm
5 ஆண்டு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக! சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை வலியுறுத்தல்

5 ஆண்டு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக! சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை வலியுறுத்தல்

மதுரை, மே 23- மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கத் தின் (சிஐடியு) 57-வது ஆண்டு பேரவை சனிக்கிழமை மேலப்பொன்னகரத்தில் மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலை மையில் நடைபெற்றது.

செயல் தலைவர் ரவி கொடியேற்றி வைத்தார்.

செயலாளர் சரவணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். செயலாளர் வைரமணி வரவேற்று பேசி னார். சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் இரா.

தெய்வராஜ் துவக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் எம்.பாலசுப்பிர மணியன், பொருளாளர் கருப்பசாமி ஆகி யோர் அறிக்கை சமர்ப்பித்தனர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் வாழ்த்துரை வழங்கினார்.

தொட ர்ந்து உள்ளாட்சி ஊழியர் சம்மேளன மாநி லப் பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிர மணியன் நிறைவுரையாற்றினார்.

நிர்வாக குழு உறுப்பினர் எம்.வைரபதி நாகராஜ் நன்றி கூறினார். இதில், செயல் தலைவராக ஜி.ரவி, தலை வராக கே.மீனாட்சிசுந்தரம், பொதுச்செய லாளராக எம்.பாலசுப்பிரமணியம், பொரு ளாளராக கே.கருப்பசாமி உள்ளிட்டு 40 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட் டது.

மாநாட்டில், தூய்மைப் பணிகளை தனி யார்மயமாக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாநகராட்சிகளில் உள்ள 30 ஆயி ரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தூய் மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற மனிதவள பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், வாரிசு வேலைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் தினக்கூலி தூய் மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும், தினக் கூலி, தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டது.

பாதாளச் சாக்கடை மற்றும் பிட்டர் கூலி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகர ணங்கள், காப்பீடு, இஎஸ்ஐ மற்றும் மறு வாழ்வு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என் றும், ஓய்வு பெற்ற மாநகராட்சி பணியா ளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை உட னடியாக வழங்க வேண்டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், வார்டு அலுவலகங்களில் கழிப் பறை, ஓய்வறை மற்றும் குடிநீர் வசதிகள் அமைக்க வேண்டும், வீடில்லாத மாநக ராட்சி பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பெண் தொழிலாளர்களுக்கு பாது காப்பு வழங்குதல், ஒப்பந்த நிறுவனங்க ளின் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுப்பது, காலை உணவு திட்டத்தின் தரத்தை மேம்படுத்துதல், முதிய தினக்கூலி பணி யாளர்களுக்கு பணிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட மொத்தம் 21 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதனுடன், சிஐடியு சார்பில் சென்னை யில் நடைபெறும் “நிர்மல் பள்ளி” திட்டத் திற்கு சங்கத்தின் சார்பாக ரூ.5 ஆயிரம் நிதி யும் வழங்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.