மதுரை மாநகராட்சி முறைகேடுகளை விசாரித்திடுக! அவர்லேண்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்க! சிபிஎம் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
9 Jul 2026, 9:41 pm

மதுரை மாநகராட்சி முறைகேடுகளை விசாரித்திடுக! அவர்லேண்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்க! சிபிஎம் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

மதுரை, ஜூலை 9- மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற் கொண்டு வரும் ‘அவர்லேண்ட்’ தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பொது சேவைகளில் தனியார்மய முறையை முழுமையாகக் கைவிட வேண்டும், சொத்து வரி முறைகேடுகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான உயர்மட்ட விசார ணை நடத்தி, தொடர்புடை யோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின் தலைமை வகித் தார்.

மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம். பாலசுப்பிரமணியம் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மாமன்ற உறுப்பி னர் என்.விஜயா, மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவ ட்டச் செயலாளர் மா. கணே சன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர்.

உள்ளாட்சி அமைப்புகளில் தனியார்மயம் ஆபத்தானது ஆர்ப்பாட்டத்தில் சிபி எம் மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங் கம் கண்டன உரையாற்றுகை யில், “மாநகராட்சியின் தூய் மைப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப் பது மக்கள் நலனுக்கும் தொழிலாளர் உரிமைகளுக் கும் முற்றிலும் எதிரானது.

இது ஏதோ ஒரு குறிப்பிட்ட நிறு வனத்திற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; உள் ளாட்சி அமைப்புகளில் புகுத்தப்படும் தனியார்மயக் கொள்கையை எதிர்க்கும் கொள்கை ரீதியான போராட் டம்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அவர்லேண்ட் நிறுவனம் தொழிலாளர் களைக் கடுமையாகச் சுரண்டி, மிகக் குறைந்த ஊதியம் வழங்கி, தன்னிச்சையாகப் பணிநீக்கம் செய்து வருகிறது. தொழிற்சங்கங்களின் சட்டப் படியான பேச்சுவார்த்தையை யும் அது தொடர்ந்து புறக் கணிக்கிறது.

உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் திருக் கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழாக் காலங்களில் மாந கராட்சி நிர்வாகத்திற்கு அழுத் தம் கொடுத்து, தூய்மைப் பணிகளை நிறுத்துவோம் என இந்த நிறுவனம் மிரட்டி யதே இதன் மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கு குரூர மான சான்றாகும்” எனக் குற்றம்சாட்டினார்.

குப்பைகளை முறை யாக அகற்றாமல் மண்ணை அள்ளி எடை காட்டி மாநக ராட்சியை ஏமாற்றியுள்ளதால் மதுரை ‘குப்பை நகரம்’ ஆகும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும், எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, மாநகராட்சியே நிரந்தரத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அம்ரூத் திட்டத்தின் கீழ் மதுரையின் குடிநீர் விநியோகமும் தனியா ர்மயமாக்கப்படும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அத்தியாவசியச் சேவை களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை அரசு கைவிட வேண்டும் என்றார்.

மண்ணை ஏற்றி ரூ. 75 லட்சம் அபராதம்; நிறுவனத்தைப் பாதுகாப்பது யார்? ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசுகையில் “மதுரை மாநக ராட்சியில் நாள்தோறும் சேக ரிக்கப்படும் 916 டன் குப்பை களில், 100 முதல் 200 டன் வரை குறைவாக அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக 100 டன் வரை வெறும் மண்ணை லாரிகளில் ஏற்றி எடையைக் காட்டி அவர்லேண்ட் நிறு வனம் மிகப்பெரிய மோசடி யில் ஈடுபட்டு வந்தது.

சிபிஎம் மற்றும் சிஐடியு, விசிக தொழிற் சங்கங்களின் கடந்த ஒன்றரை ஆண்டுகாலத் தொடர் போராட்டங்களால்தான் இந்த உண்மை அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்தது. இந்த மோசடி உறுதி செய்யப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதத்தில் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் அந்நிறுவனத்திற்கு ரூ. 75 லட்சம் அபராதம் விதித்தார்.

ஆனால், அபராதத்தைச் செலுத்த மறுத்த நிறுவனம், தேர்தல் நடத்தை விதி களின் போது சித்திரைத் திரு விழாவை முடக்கும் நோக்கில் தன்னிச்சையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. அப்போது மாநகராட்சி அதி காரிகள் உறுதியுடன் செயல்பட்டு, தனியாரை நம்பாமல் வெறும் ரூ. 50 லட்சத்தில் திருவிழா தூய்மைப் பணிகளை முழுமையாக முடித்து அரசுக்கு ரூ. 45 லட்சத்தை மிச்சப்படுத்தினர்.

இதுவே தனியார் நிறுவனம் காட்டி வந்த கூடுதல் செலவுக் கணக்குகளுக்குச் சான்றாகும்.

இதன் பிறகும் இரவு நேரங்களில் மண்ணை ஏற்றி மோசடி செய்த லாரிகளைத் தோழர்கள் களத்தில் பிடித்துக் கொடுத்ததால், தற்போது அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளனர்.

இவ்வளவு ஆதாரங் கள் இருந்தும் நிறுவனம் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், இதனை அதி கார மையத்தில் இருப்பவர்கள் யாரோ பாதுகாக்கிறார்கள் என்ற பலத்த சந்தேகம் எழுகிறது” என்றார்.

மேலும், தாம்பரம், கரூர், தூத்துக்குடி போன்ற மாநக ராட்சிகளிலும் இதே நிறு வனம் செயல்படுவதைச் சுட்டி க்காட்டிய அவர், தமிழக அரசு தனது முன் நிற்கும் 5 கோடி நகர்ப்புற மக்களின் சுகாதாரமும் வாழ்க்கைத் தர மும் முக்கியமா அல்லது சில தனியாரின் லாபம் முக்கியமா என்பதைச் சிந்தித்து, தூய்மை பணிகளைத் தனியாருக்கு ஒப் படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மக்களுக்கு முன்னுரி மை அளிக்கும் முன்மாதிரி யைத் தமிழக அரசு உரு வாக்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் எம்பி வலி யுறுத்தினார்.

நிகழ்வின் இறுதியில், வடக்கு ஒன்று பகுதிக்குழு செய லாளர் வி.கோட்டைச்சாமி நன்றி கூறினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.