மதுரை மண்டல இணைப்பதிவாளர் பணியிடத்தை நிரப்பக் கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
1 Oct 2026, 10:55 pm

மதுரை மண்டல இணைப்பதிவாளர் பணியிடத்தை நிரப்பக் கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக்.1–மதுரை மண்டல இணைப்பதிவாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்பக் கோரியும், நிரந்தர மண்டல இணைப்பதிவாளரை நியமிக்க வலியுறுத்தியும், முழு கூடுதல் பொறுப்பில் உள்ள இணைப்பதிவாளரின் ஊழியர் விரோத போக்கைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் தாமோதரராவ் தலைமை வகித்த இ்ப்போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் ஆசிக் ரசூல் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநிலப் பொதுச்செயலாளர் நவநீத கிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் க. சந்திர போஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஐந்து மாதங்களாகக் காலியாக உள்ள இணைப்பதிவாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்புவதுடன், குறைதீர்க்க வரும் விவசாயிகளையும் பணியாளர்களையும் நேரில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கூகுள் மீட் கூட்டங்கள் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது, கோப்புகளில் உரிய நேரத்தில் கையொப்பமிடுவது, மருத்துவ அடிப்படையில் மாறுதல் கோரிய முதுநிலை ஆய்வாளர் மல்லிகா மற்றும் தட்டச்சர் ஐஸ்வர்யா ஆகியோரின் கோரிக்கையைப் பரிசீலிப்பது, பால் கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் க. நீதிராஜா, மாவட்டத் தலைவர் இரா. தமிழ், மாவட்டப் பொருளாளர் ஆ. பரமசிவன், தெற்கு வட்டக்கிளை செயலாளர் பிரேமலதா, துணைத்தலைவர் மகுடீஸ்வரன், செயற்குழு உறுப்பினர் பிரதீப் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அழகர்சாமி நன்றி கூறினார்.