முந்தய பக்கம்

கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

22 Sept 2026, 9:24 pm
கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மதுரை, செப்.22-கட்டுமான தொழிலாளர்களின் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை நலவாரியம் முன்பு செவ்வாய்க் கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண் டும், கட்டுமான இடுபொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும், தீபாவளி சிறப்புத் தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும், பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜே.லூர்து ரூபி, சி.சுப்பையா ஆகியோர் விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் நிறைவுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram