தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உறுப்பு தானம் மூலம் பலருக்கு உயிர் கொடுத்த தேவநாதனுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

13 May 2026, 9:44 pm
உறுப்பு தானம் மூலம் பலருக்கு உயிர் கொடுத்த தேவநாதனுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி
<p><strong>உறுப்பு தானம் மூலம் பலருக்கு உயிர் கொடுத்த தேவநாதனுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி</strong></p><p>மதுரை, மே 13- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உறுப்பு தானம் மூலம் பலருக்கு உயிர் கொடுத்த மறைந்த சி.தேவ நாதன் அவர்களின் உட லுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் புதன்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மதுரை மாவட்டம் தெத்தூர் அருகேயுள்ள கோழிஞ்சிப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த சி.தேவ நாதன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும் பத்தினர் உயர்ந்த மனித நேய உணர்வுடன் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் அளித் தனர். அதன்படி, அவரது இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, பலரின் உயி ரைக் காக்கும் அரிய மனித நேய செயலாக அமைந் துள்ளது. மருத்துவமனையில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர், மறைந்த அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்தார். மேலும், துயரமான சூழலிலும் மனிதநேய உணர்வுடன் எடுத்த இந்த தன்னலமற்ற முடிவு சமூ கத்திற்கு மிகப்பெரிய எடுத் துக்காட்டாக திகழ்கிறது என்றும் பாராட்டினார். உறுப்பு தானம் என் பது பிறரின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைக்கும் உயர்ந்த செயல் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது. சமூகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதி கரிக்க வேண்டிய அவசி யத்தையும் இந்த மனிதநேய செயல் வெளிப்படுத்தி யுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.