தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு திரிபுரா எதிர்கட்சித் தலைவர் ஜிதேந்திர சவுத்ரி பாராட்டு

12 minutes before
மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு  திரிபுரா எதிர்கட்சித் தலைவர் ஜிதேந்திர சவுத்ரி பாராட்டு

மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு திரிபுரா எதிர்கட்சித் தலைவர் ஜிதேந்திர சவுத்ரி பாராட்டு

அகர்தலாமதுரை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் நிஷாந்த்கிருஷ்ணா. 2018 பேட்ச் அதிகாரி ஆவார். திருப்பரங்குன்றத்

தில் உள்ள நில அளவை கல் தூணில் உச்சநீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளின் கடைசிக் கட்டமிரட்டலுக்கு அஞ்சாமலும், தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் வழக்கமாக கார்த்திகை தீபம்ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற உத்தர

விட்டார். மேலும் கல் தூணில் தீபம் ஏற்றாததைக்கண்டித்து ஆர்எஸ்எஸ் - பாஜக, இந்து முன்னணிகுண்டர்களின் கலவரம் தூண்டும் போராட்டத்தை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் என்.தேவநாதன்உடன் இணைந்து சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள்கொண்டு வந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர்நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில்அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் மதுரைமாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, அவரது சக அதிகாரியான மதுரை காவல் கண்காநிற்பவர்கள் எவ்வளவு அதிகாரம், செல்வாக்கு, அச்சுறுத்தும் ஆளுமை கொண்டவர்களாகஇருந்தாலும், துணிச்சல், மன உறுதி, தளராத நேர்மையுடன்ஒருவரால் தனது அரசியலமைப்புக் கடமையை நிலைநாட்ட முடியும் என்பதை மதுரை மாவட்டநிர்வாகத்தினர் நிரூபித்துள்ளனர்.இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன்மதச்சார்பற்ற பண்பு, ஜனநாயக விழுமியங்கள்,நிறுவனங்களின் நேர்மை ஆகியவை அரசியல் அழுத்தம், அச்சுறுத்தல் மூலம் செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு,எப்போதும் முதன்மையானதாக இருக்கவேண்டும் என்பதை அவர்களின் செயல்பாடுமீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ராயல் சல்யூட்நிஷாந்த் கிருஷ்ணா அவர்களுக்கு ஒரு ராயல்சல்யூட். அகில இந்தியப் பணி அதிகாரிகள்மத்தியில் துணிச்சல், நேர்மை, அரசியலமைப்பு அர்ப்பணிப்பின் தனித்துவமான அடையாளமாக நீங்கள் உருவெடுத்துள்ளீர்கள். உங்களைப் போன்ற நூற்றுக்கணக்கான இளம், நேர்மையான, அச்சமற்ற குடிமைப் பணி அதிகாரிகளின்உறுதியான அர்ப்பணிப்பினால்தான், நமது குடியரசின் அடிப்படைக் கொள்கைகளான அரசியலமைப்புமேலாதிக்கம், கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவை வருங்காலத் தலைமுறைகளுக்காகப் பாதுகாக்கப்பட்டு வலுப்படுத்தப்படும். உங்களைப் போன்ற அதிகாரிகள், இந்தியாவின் அரசியலமைப்பு நிறுவனங்கள், ஜனநாயக அடித்தளங்களின் நீடித்த வலிமையின் மீதான எங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள்.

உங்கள் துணிச்சல், நிலைப்பாடு, அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான தளராத அர்ப்பணிப்புக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். உங்களைப் போன்ற அதிகாரிகளைப் பெற்றிருப்பதற்காக இந்த தேசம் பெருமைப்படஒவ்வொரு காரணமும் உள்ளது” என ஜிதேந்திர சவுத்ரி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.