தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மீண்டும் மறுப்பு - சிபிஎம் கண்டனம்

yesterday
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மீண்டும் மறுப்பு - சிபிஎம் கண்டனம்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதியை ஒன்றிய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஒப்புதல் அளிக்க மறுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

"மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதியை ஒன்றிய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஒப்புதல் அளிக்க மறுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சென்னையைத் தொடர்ந்து மதுரையில் திருமங்கலம் முதல் யானைமலை வரை ரூ. 11,360 கோடி மதிப்பீட்டிலும், கோவையில் இரண்டு வழித்தடங்களில் ரூ. 10,740 கோடி மதிப்பீட்டிலும் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுடன் ஒன்றிய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. மக்கள் தொகையை காரணம் காட்டி, முன்னதாக இத்திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் தமிழக அரசு திருத்தங்களுடன் மீண்டும் அனுமதி வழங்கிட ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், மதுரை, கோவையில் போதுமான மக்கள் தொகை இல்லை என்றும், மெட்ரோ அமைத்தாலும் பயண நேரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும் கூறி ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய மதுரை, கோவைக்கு சமமான உத்தரபிரதேசத்தின் ஆக்ரா, மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்றும் ஒடிசாவின் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மதுரை மற்றும் கோவைக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஒன்றிய அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறையின் விளைவாகும்.

ஒன்றிய பாஜக அரசு ஜி.எஸ்.டி. வரி பங்கீட்டில் உரிய நிதி வழங்க மறுப்பது, கல்வி நிதி வழங்க மறுப்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கான அனுமதி மறுப்பது உள்ளிட்டு தமிழகத்திற்கு விரோதமாகவும், பாரபட்சமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியே தற்போது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதியை மறுத்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கும் போக்கை கைவிட்டு மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

மேலும், ஒன்றிய பாஜக அரசின் இந்த தமிழக விரோதப் போக்கிற்கு எதிராக தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும், அமைப்புகளும் கண்டனக் குரலெழுப்புமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.