தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரையில் சிஎன்ஜி மொத்த விற்பனை நிலையம், மின்சார ஆட்டோக்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க வேண்டும் ரயில்வே அதிகாரிகள், சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் மனு அளிப்பு

6 Jun 2026, 10:45 pm
மதுரையில் சிஎன்ஜி மொத்த விற்பனை நிலையம், மின்சார ஆட்டோக்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க வேண்டும் ரயில்வே அதிகாரிகள், சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் மனு அளிப்பு
<p><strong>மதுரையில் சிஎன்ஜி மொத்த விற்பனை நிலையம், மின்சார ஆட்டோக்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க வேண்டும் ரயில்வே அதிகாரிகள், சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் மனு அளிப்பு</strong></p><p>மதுரை, ஜூன் 6- மதுரை நகரில் சிஎன்ஜி மொத்த விற்பனை நிலையம் அமைப்பதற்கும், மதுரை ரயில் நிலையத்தில் மின்சார ஆட்டோக்களுக்கான சார்ஜிங் பாயிண்ட்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் ரயில்வே அதி காரிகளிடம் சிஐடியு மற்றும் ஏஎஸ்பி மோட்டார் நிறுவனம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடந்த ஜூன் 4-ஆம் தேதி மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டு மானப் பணிகளை சு.வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தபோது, சிஐடியு மற்றும் சிஎன்ஜி ஆட்டோ விற்பனை நிறுவனமான ஏஎஸ்பி மோட்டார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து மனு வழங்கினர். அந்த மனுவில், மதுரை மாநகர எல்லைக் குள் சிஎன்ஜி மொத்த விற்பனை நிலையம் இல்லாததால், ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் நகரத்திற்கு வெளியே நீண்ட தூரம் பயணித்து எரி வாயு நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடு தல் செலவு, வேலை நேர இழப்பு மற்றும் வரு மான பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பி டப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமான அரசரடி அல்லது கரிமேடு பகுதி களில் ஏதேனும் ஒரு இடத்தில் சிஎன்ஜி மொத்த விற்பனை நிலையம் அமைப்ப தற்காக நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண் டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் மின்சார ஆட் டோக்களுக்கான சார்ஜிங் பாயிண்ட்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தனியாக மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இந்த சந்திப்பின்போது சிஐடியு மாநிலச் செயலாளர் இரா.லெனின், மாநிலக் குழு உறுப்பினர் இரா.தெய்வராஜ் மற்றும் ஏஎஸ்பி மோட்டார் நிறுவனத்தின் பிரதிநிதி கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.