தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிஎன்ஜி தட்டுப்பாட்டால் மதுரையில் அரசு பேருந்து சேவை பாதிப்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய தொழிலாளர்கள் வலியுறுத்தல்

31 May 2026, 10:05 pm
சிஎன்ஜி தட்டுப்பாட்டால் மதுரையில் அரசு பேருந்து சேவை பாதிப்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய தொழிலாளர்கள் வலியுறுத்தல்

சிஎன்ஜி தட்டுப்பாட்டால் மதுரையில் அரசு பேருந்து சேவை பாதிப்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய தொழிலாளர்கள் வலியுறுத்தல்

மதுரை, மே 31- மதுரையில் சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து சேவை கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில் உடனடி மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

வெளிப்புற நிறுவன சார்பு நிலையால் சேவை பாதிப்பு

அரசு புதிய தொழில்நுட்பம் அல்லது மாற்று எரிசக்தி அடிப்படையிலான போக்கு வரத்து திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது, அதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை முன்கூட்டியே உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வெளிப் புற நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டால், அரசு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடி யாததாகிவிடும்.

குறித்த நேரத்தில் இயக்கப்படாத பேருந்துகள்

மதுரை அரசு போக்குவரத்துக் கழக பணி மனையில் தற்போது சுமார் 110 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சிஎன்ஜி தட்டுப்பாடு காரணமாக அவற்றை இயக்குவதில் பல்வேறு சிக்கல் கள் உருவாகியுள்ளன. கடந்த சில நாட்க ளாக திருமங்கலம், மாட்டுத்தாவணி உள் ளிட்ட முக்கிய வழித்தடங்களிலும் பேருந்து கள் குறித்த நேரத்தில் இயக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.

எரிவாயு நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள அரசி யல் மற்றும் பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வும், விநியோகச் சிக்கல்களும் ஏற் பட்டுள்ளன. இதன் காரணமாக தனியார் வாகனங்களும் அதிக அளவில் சிஎன்ஜி பயன்பாட்டிற்கு மாறியுள்ளன. இதனால் எரிவாயு நிரப்பு நிலையங்களில் நீண்ட வரி சைகள் உருவாகியுள்ளன. மதுரையில் அரசு பேருந்துகள் தற்போது எல்லீஸ் நகர் மற்றும் ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிஎன்ஜி நிரப்பு நிலையங்க ளையே நம்பியுள்ளன. ஒரு பேருந்தில் சிஎன்ஜி நிரப்ப சுமார் 20 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில், 110 பேருந்துகளுக்கு எரிவாயு நிரப்புவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. அதே நிலையங்களில் தனியார் வாக னங்களும் எரிவாயு நிரப்ப வருவதால், அரசு பேருந்துகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதுவே பேருந்து சேவைகள் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு போக்குவரத்துப் பணிமனை யிலும் தனித்துவமான சிஎன்ஜி நிரப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தால், தற்போதைய சிக்கல்களைத் தவிர்க்க முடிந்திருக்கும் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தடையற்ற, தரமான சேவையை உறுதி செய்திடுக!

மேலும், பல ஆண்டுகளாக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்குப் பதிலாக புதிய நிய மனங்கள் மேற்கொள்ளப்படாததால், ஓட்டு நர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணி யாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. புதிய வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் நீண்டகாலத் திட்டங்களும் போதுமான அளவில் செயல்படுத்தப்படவில்லை. பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் சமூக நலத் திட்டமாக இருந்தாலும், அதற்கான நிதி ஈடு மற்றும் வருவாய் ஆதா ரங்களை அரசு உறுதி செய்து, போக்கு வரத்துக் கழகங்களுக்கு தேவையான ஆத ரவை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்க ளுக்கு தனியாக சிஎன்ஜி நிரப்பு மையங் களை அமைப்பதுடன், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். தேவையான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை உறுதி செய்து, பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தர மான போக்குவரத்து சேவையை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிஎன்ஜி தட்டுப்பாடு நீடித்து வரும் நிலை யில், அரசு போக்குவரத்துக் கழகங்க ளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரி வாயு வழங்கவும், பேருந்து சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க அவசர மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் பொதுமக் கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலா ளர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.