சிஎன்ஜி தட்டுப்பாட்டால் ஆட்டோ தொழிலாளர்கள் அவதி எல்லீஸ்நகர் மையத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை எரிவாயு வழங்க நடவடிக்கை: அதிகாரிகள் உறுதி
14 May 2026, 9:03 pm
<p><strong>சிஎன்ஜி தட்டுப்பாட்டால் ஆட்டோ தொழிலாளர்கள் அவதி எல்லீஸ்நகர் மையத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை எரிவாயு வழங்க நடவடிக்கை: அதிகாரிகள் உறுதி</strong></p><p>மதுரை, மே 14- மதுரையில் நிலவி வரும் சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஆயி ரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர் களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லீஸ்நகர் சிஎன்ஜி விநியோக மையத்தில் எரிவாயு விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என மதுரை நகர் ஆட்டோ தொழிலாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மதுரை நகர் ஆட்டோ தொழிலாளர் சங்கத் தலை வர் ஆர்.தெய்வராஜ், பொதுச் செயலா ளர் கே.அறிவழகன், என்.கனகவேல் மற்றும் விஜயகுமார் ஆகியோர் வியா ழக்கிழமை எல்லீஸ்நகர் சிஎன்ஜி விநி யோக மைய மேலாளரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 18 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியாவில் உற்பத்தியாகும் பசுமை எரிவாயுவான சிஎன்ஜி மட்டுமே ஓரளவுக்கு கிடைத்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 15 நாட்களாக எல்லீஸ்நகர் சிஎன்ஜி மையத்தில் ஆட்டோக்களுக்கான எரிவாயு விநி யோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், ஆட்டோ தொழிலாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளதாகவும், இதனால் அவர்களின் அன்றாட வருமானமும் வாழ்வாதார மும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்த மைய மேலா ளர், காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை ஆட்டோக்களுக்கு சிஎன்ஜி எரி வாயு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வா கத்துடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.</p>
