மதுரையில் சிஐடியு - ஏஐடியுசி மேதின பேரணி -பொதுக்கூட்டம்
9 May 2026, 9:17 pm
<p><strong>மதுரையில் சிஐடியு - ஏஐடியுசி மேதின பேரணி -பொதுக்கூட்டம்</strong></p><p>மதுரை, மே 9- உழைக்கும் மக்களின் உன்ன தத் திருநாளான மே தினத்தை யொட்டி, மதுரையில் 140-வது மேதின பேரணி - பொதுக்கூட்டம் சனிக்கிழமை மதுரை மாநகர் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் நடை பெற்றது. சிஐடியு மதுரை மாவட்டக் குழு அலுவலகத்தில் மாவட்டத் தலை வர் பாலசுப்பிரமணியம் தலைமை யில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச் செய லாளர் எஸ்.கண்ணன் மே தின கொடியினை ஏற்றி வைத்து உரை யாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா.கணே சன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின், மாநிலக் குழு உறுப்பினர் இரா.தெய்வராஜ், பொருளாளர் ஜே.லூர்துரூபி ஆகி யோர் கலந்து கொண்டனர். மாலையில் நடைபெற்ற பேர ணியில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், ஏஐ டியுசி மாநில துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான நா.பெரியசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இரா.தமிழ், வி.தொ.ச. மாவட்டத் தலைவர் என்.ஜோதி ராமலிங்கம், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் இரா.தெய்வராஜ், ஏஐடியுசி தேசிய கவுன்சில் உறுப்பினர் எம். நந்தாசிங் உள்ளிட்டு ஏராளமான நிர்வாகிகள் அரசரடி மின்வாரிய அலுவலகத்திலிருந்து பேரணி யாக புறப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் பெத்தானியாபுரம் வந்தனர். தொடர்ந்து சிஐடியு மாவட்ட செயலாளர் இரா.லெனின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.</p>
