முந்தய பக்கம்

அதிக மதிப்பெண்கள் எடுத்து சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் சாதனை

9 May 2026, 12:37 am
அதிக மதிப்பெண்கள் எடுத்து சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் சாதனை
<p><strong>அதிக மதிப்பெண்கள் எடுத்து சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் சாதனை</strong></p><p>​​​​​​​மதுரை,மே 8- 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் களை பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப் பள்ளி மாண வர் பிரணவ் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இரண்டாவதாக பிரிஜேஸ் 594 மதிப்பெண்கள் மற்றும் சேத்தன்னா 588 மதிப்பெண்களும் எடுத்து பள்ளி க்குப் பெருமை சேர்த்துள்ளனர். 76 மாணவர்கள் 550 மதிப்பெண் களுக்கு மேலும், 265 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும் எடுத்துள்ளனர். கணிதப் பாடப்பிரிவில் 13 மாணவர்கள், வேதியியல் பாடப் பிரிவில் 12 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாண வர்களைப் பள்ளித் தலைவர் இராஜா கிளைமாக்சு பாராட்டினார். தொடர் சாதனைப் பற்றிக் கேட்டபோது, மாநில அளவில் சாதனை பட்டியல் வெளியிடப்படுவது கைவிடப்பட்ட சூழ்நிலையிலும், சி.இ.ஓ.ஏ பள்ளி தனது மாணாக்கர்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு சிறப்பான திட்டத்துடன் அரசுப் பொ துத் தேர்வுக்குத் தயார் செய்ததன் பலனாக தொடர்ந்து இச்சாதனை நிகழ்ந்துள்ளது. சாதனை மாணவர்களைப் பள்ளி இணைத் தலைவர் இ. சாமி, துணைத் தலைவர்கள், பள்ளி முதல்வர்கள் கலா, மஞ்சுளா, கோடீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram