தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெருங்கும் பருவ மழை மதுரையில் சீரமைக்காமல் கிடக்கும் கால்வாய் பணி

17 May 2026, 8:56 pm
நெருங்கும் பருவ மழை மதுரையில் சீரமைக்காமல் கிடக்கும் கால்வாய் பணி

நெருங்கும் பருவ மழை மதுரையில் சீரமைக்காமல் கிடக்கும் கால்வாய் பணி

ரூ.20.85 கோடி நிதி என்ன ஆனது? மதுரை, மே 17- தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மதுரை மாநகரின் முக்கிய கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்பு கள் தூர்வாரப்படாமல், ஆக்கிரமிப்புகளா லும் குப்பை குவியல்களாலும் பாதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், கிருதுமால் நதி, நிலையூர் கால்வாய் மற்றும் பெருங்குடி கால்வாய் களை சீரமைக்க ரூ.20.85 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரி வித்துள்ளது.

கிருதுமால் கால்வாயை ஆச்சம்பட்டி முதல் சிந்தாமணி வரை 20 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரவும், 4 கிலோ மீட்டர் புதுப்பிக்கவும் ரூ.7.35 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. அதேபோல் நிலையூர் மற்றும் பெருங்குடி கால்வாய்களை சீரமைக்க ரூ.13.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தென்கரை முதல் மேலக்கால் வரை 5 கி.மீ தூரத்திற்கு ரூ.4 கோடி, மேலக்கால் முதல் காமாட்சிபுரம் வரை 4 கி.மீ தூரத்திற்கு ரூ.3 கோடி மற்றும் பெருங்குடி கால்வாய்க்கு ரூ.6.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கால்வாய்களின் நிலைமை மிகவும் படுமோசமாக இருப்ப தாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொன் மேனி, விராட்டிப்பத்து , அச்சம்பத்து, எச்.எம்.எஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாடக்குளம் உபரி நீர் கிருதுமால் ஆற்றில் கலக்கும் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வும், இதனால் மழைக்காலத்தில் நீர் தேங்கும் நிலை, வெள்ள அபாயம் அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் தண்ணீர் செல்ல வழி யின்றி பொன்மேனி உள்ளிட்ட சில பகுதி களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்தை சந்தித்தார்கள்.

அதேபோல் பெத்தானியாபுரம் வைகை ஆற்றுப் பகுதி யில் இருந்து செல்லும் அவனியாபுரம் கால் வாய் இதுவும் பல இடங்களில் தூர்வாரப்படா மல் பெரும் அசுத்தம் நிறைந்த பகுதியாக உள்ளது.

மேலும், முன்னர் 17 முதல் 35 அடி அக லத்தில் இருந்த கால்வாய்கள் தற்போது 3 முதல் 10 அடியாக சுருங்கியுள்ளதாகவும், பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உருவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிந்தாமணி முதல் ஆச்சம்பட்டி வரையிலான கால்வாய் பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப் படுவதால், மழைநீர் வடிகால் திறன் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டங்கள் மற்றும் மாநகராட்சி கூட்டங்க ளில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கால்வாய்கள் “முழுமையான தூர்வாரும் பணி நடைபெறவில்லை.

கால்வாய்களின் இயல்பான அகலம் குறைக்கப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் இணைந்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

“கிருதுமால் கால் வாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுப்பணித்துறை மட்டும் செயல்பட்டால் போதாது. மாநகராட்சியும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்”. ம

ழைக்காலம் தொடங்கவுள்ள நிலை யில், கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பை கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் நீரேற்றத் தடை கள் உடனடியாக அகற்றப்பட வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். ரூ.20.85 கோடி நிதி முறையாக பயன் படுத்தப்பட்டு, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து விரைவான நட வடிக்கை எடுத்தால் மட்டுமே மழைக்காலங்க ளில் வீணாக போகும் மழைநீர் கால்வாய்கள் மூலமாக நீர் நிலைகளுக்கு போய் சேரும்.

எனவே பொதுப்பணித்துறை நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக கால் வாய்களை தூர்வாரிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.