குருதிக்கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம்
6 Oct 2026, 8:55 pm

குருதிக்கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம்

மதுரை, அக்.6-தேசிய தன்னார்வ குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை அரசுமருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா கலையரங்கில் குருதிககொடையாளர்கள் உறுதிமொழியேற்பு மற்றும் பாராட்டு விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, குருதிக் கொடையாளர் களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங் களை வழங்கினார்.

முன்னதாக, மதுரை மருத்துவக் கல்லூரியின் அங்கமாக செயல்படும் மருத்துவத் துணை அறிவியல் பிரிவு, மருந்தியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பள்ளி ஆகியவற்றில் குருதிக்கொடையாளர்கள் மன்றத்தின் கிளைகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ.கல்லாணை, அரசுராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிஐடியு மதுரை மாநகர் மாவட்டக் குழுவுக்கு விருது

மதுரை மருத்துவக் கல்லூரியில் சிறந்த குருதிக் கொடையாளருக்கான விருது சிஐடியு மதுரை மாந

கர் மாவட்டக் குழுவுக்கு வழங்கப்பட்டது. விருதை சிஐடியுமதுரை மாநகர் மாவட்டப்பொருளாளர் ஜெ.லூர்து ரூபி மற்றும் மாவட்ட உதவிச்செயலாளர் எஸ்.சந்தியாகு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.