தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசரடி ரயில்வே மைதான கட்டண உயர்வை திரும்பப் பெற்றிடுக! வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

9 Jul 2026, 9:38 pm
அரசரடி ரயில்வே மைதான  கட்டண உயர்வை திரும்பப் பெற்றிடுக! வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
<p><strong>அரசரடி ரயில்வே மைதான கட்டண உயர்வை திரும்பப் பெற்றிடுக! வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்</strong></p><p>மதுரை, ஜூலை 9- மதுரை அரசரடி ரயி ல்வே மைதானத்தின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழனன்று மதுரை அரச ரடி ரயில்வே மைதானத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சாமானிய மக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் அரசரடி ரயில்வே மைதானத்திற்கு ரயில்வே நிர்வாகம் திடீ ரென கட்டண உயர்வு அறி வித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபயிற்சி யில் ஈடுபட்ட பொதுமக்களி டம் கையெழுத்துகள் பெறப் பட்டன. மேலும், கட்டண உய ர்வை திரும்பப் பெற வலி யுறுத்தும் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இதுகுறித்து வாலிபர் சங்க நிர்வாகிகள் கூறுகை யில், “எந்தவித அடிப்படை வசதிகளும் முழுமையாக இல்லாத நிலையில் மைதா னக் கட்டணத்தை உயர்த்தி யிருப்பது கண்டனத்திற்குரி யது. எனவே, கட்டண உய ர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கையெ ழுத்து இயக்கத்தில் பெறப் பட்ட மனுக்கள் மதுரை கோட்ட ரயில்வே மேலாளரி டம் நேரில் வழங்கப்படும். அதன்பிறகும் உரிய நட வடிக்கை எடுக்கப்படாவிட் டால், பொதுமக்களை திரட்டி அடுத்தக்கட்ட போராட்டங் கள் முன்னெடுக்கப்படும் என் றனர். மேலும், ரயில்வே மைதா னத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்ப டைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை ஏற்கனவே வாலி பர் சங்கம் மக்கள் ஆதரவு டன் முறியடித்தது. அதே போல், தற்போதைய கட்டண உயர்வும் திரும்பப் பெறப் படும் வரை போராட்டம் தொட ரும் என்றும் தெரிவித்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் வாலிபர் சங்க மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டி.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எஸ். வேல்தேவா, மாவட்டப் பொருளாளர் க.கௌதம் பாரதி, மாநிலக் குழு உறுப்பி னர் சுகஸ்ரீ, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிந்து மோகன், செந்தில், ரவி, செல்வமணி, டீலன் ஜஸ்டின், பகுதிக்குழு உறுப்பினர்கள் விஜய், ஹரி, கணேஷ், பகத்சிங், லோகே ஸ்வரி, தருண், முத்துப்பாண்டி, கீர்த்தனா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், வாலிபர் சங்க விளையாட்டுக் கழக செய லாளர் பால்சாமி, துணைச் செயலாளர் இரா.லெனின் மற்றும் ராஜாராம் ஆகியோ ரும் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.