தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சர்வதேச அந்தஸ்து பெற்ற மதுரை விமான நிலையம்! 27 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி!

12 Mar 2026, 4:20 pm
சர்வதேச அந்தஸ்து பெற்ற மதுரை விமான நிலையம்!  27 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி!
<p><strong>சர்வதேச அந்தஸ்து பெற்ற மதுரை விமான நிலையம்! &nbsp;27 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி!</strong></p> <p>மதுரை, மார்ச் 10 &ndash; தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான நுழைவுவாயிலாகக் கரு தப்படும் மதுரை விமான நிலையம், ஒருவழி யாக &lsquo;சர்வதேச விமான நிலையம்&rsquo; என்ற &nbsp;அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள் ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை செவ்வாய்க்கிழமை வழங்கியது. இதன் மூலம், மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஒன்பது நாடாளுமன்றத் தொகுதி மக்களின் 27 ஆண்டுகால இடைவிடாத போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கால் நூற்றாண்டு காலக் கனவு 1999 ஆம் ஆண்டு மதுரை மக்களால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இது. மதுரை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகள், மக்கள் பிரதி நிதிகள் எனப் பலரும் இதற்காகப் பல பத்தாண்டுகளாக குரல் கொடுத்து வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகன் தொடங்கி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வரை இந்தப் போராட்டம் சமரசமின்றித் தொடர்ந்தது. இடை யில் பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், மதுரை விமான நிலையத்தின் சர்வதேச அந்தஸ்து கோரிக்கை மட்டும் நீண்டகாலமாக ஒன்றிய அரசால் ஏதேதோ காரணங்கள் கூறித் தள்ளிப்போடப்பட்டு வந்தது. நாடாளுமன்றத்தில் &nbsp;அதிர வைத்த புள்ளிவிவரங்கள் 2019 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று மதுரை &nbsp;நாடாளுமன்ற உறுப்பினராக சு. வெங்கடே சன் மக்களவையில் ஆற்றிய தனது இரண்டா வது உரை, இந்திய விமான போக்குவரத்துத் துறையையே அதிர வைத்தது. &ldquo;மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலை யமாக அறிவிக்க வேண்டும்&rdquo; என்ற கோரிக்கை யை அவர் வெறும் உணர்ச்சியாக மட்டும் முன்வைக்கவில்லை; மாறாக, சட்டபூர்வமான மற்றும் தர்க்கரீதியான தரவுகளுடன் ஒன்றிய அரசைத் திணறடித்தார். அவர் தனது உரையில் முன்வைத்த மிக முக்கியமான புள்ளிவிவரம் அன்றைய கூட்டத்தொடரையே திரும்பிப் பார்க்க வைத்தது. &ldquo;இந்தியாவில் ஏற்கனவே சர்வ தேச அந்தஸ்து பெற்றுள்ள 20 விமான நிலை யங்களில், ஒன்பது விமான நிலையங்களை விட, மதுரையிலிருந்து பயணம் செய்யும் சர்வ தேசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம்&rdquo; என்பதை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்தார். குறிப்பாக, திருப்பதி, இம்பால், ஜெய்ப்பூர் மற்றும் விஜயவாடா ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களை விட மதுரையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினார். &ldquo;ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (AAI) வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தின்படி, ஆண்டுக்கு இரண்டரை லட்சம் சர்வதேசப் பயணிகள் பயன்படுத்தும் மதுரை விமான நிலையத்தை அங்கீகரிக்க மறுப்பது எவ்வகையான நீதி? இந்த பாகு பாட்டுக்கு ஒரு அளவில்லையா?&rdquo; என்று அவர் எழுப்பிய கேள்விக்கு அன்று ஒன்றிய அரசிடம் பதில் இல்லை. பிரதமரின் வாரணாசி &nbsp;தொகுதியுடன் ஒரு ஒப்பீடு சு.வெங்கடேசன் எம்.பி.யின் வாதங்களில் உச்சகட்டமாக அமைந்தது, பிரதமரின் சொந்தத் தொகுதியான வாரணாசியுடன் அவர் செய்த &nbsp;ஒப்பீடு ஆகும். &ldquo;மரியாதைக்குரிய பிரதமர் &nbsp;அவர்களே, உங்களது வாரணாசி விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்ட சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கையை விட, மதுரையிலிருந்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகம்&rdquo; என்று அவர் குறிப்பிட்ட போது அவை நிசப்தமானது. ஒன்றிய அரசு ஆரம்பத்தில் &ldquo;தமிழ்நாட்டில் ஏற்கனவே மூன்று சர்வதேச விமான நிலை யங்கள் (சென்னை, திருச்சி, கோவை) உள்ளன, &nbsp;நான்காவது தேவையா?&rdquo; என்ற கேள்வியை முன்வைத்தபோது, சு.வெங்கடேசன் எம்.பி., அதற்குப் புள்ளிவிவரங்களுடன் பதில ளித்தார். இந்தியாவுக்கு அதிக ஜிஎஸ்டி வரி &nbsp;ஈட்டித் தரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருப்பதையும், தென்தமிழகத்தின் வர்த்தகத் தேவைகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐந்து மாநில முதல மைச்சர்கள் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் கேட்டு வரிசையில் நிற்கும் போது, &nbsp;மதுரையின் தேவையை மட்டும் ஏன் மறுக்கிறீர் கள் என்ற தர்க்கரீதியான கேள்வியை அவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக எழுப்பி வந்தார். அமைச்சரவை முடிவும் &nbsp;அதன் முக்கியத்துவமும் இந்நிலையில் மார்ச் 10 செவ்வாய்க்கிழமை நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், &ldquo;மதுரை விமான நிலையம் தெற்கு தமிழ்நாட்டிற்கான மிக முக்கியமான நுழைவு வாயில். இது சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பய ணங்களை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்வதேச அந்தஸ்து வழங்குவ தன் மூலம் உலக நாடுகளுடன் மதுரை நேரடி யாக இணையும்; இது வர்த்தகம் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியைப் பன்மடங்கு பெருக்கும்&rdquo; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மதுரையிலிருந்து நேரடி விமான சேவைகளைத் தொடங்க வேண்டும், மது ரையை &lsquo;பாசா&rsquo; (BASA) ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டும், 24 மணி நேர விமான நிலையமாக மாற்ற வேண்டும் என ஏழு ஆண்டுகளாக சு.வெங்கடேசன் எம்.பி., &nbsp;நடத்திய தொடர் அழுத்தம் இன்று முழுமை யான பலன் கொடுத்துள்ளது. தென் தமிழகத்தின் பொருளாதார மாற்றத்திற்கான திறவுகோல் மதுரை சர்வதேச விமான நிலையமாக மாறியிருப்பது வெறும் பெயரளவு மாற்றம் மட்டுமல்ல. இது கீழ்க்கண்ட துறைகளில் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது: Kதொழில்துறை வளர்ச்சி: ஆட்டோ மொபைல், ரப்பர், கெமிக்கல் மற்றும் கிரா னைட் போன்ற துறைகளில் தென் மாவட்டங்க ளில் புதிய முதலீடுகள் குவியும். Kஆன்மீகச் சுற்றுலா: மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கூடலழகர் கோவில், திருப் gரங்குன்றம், பழமுதிர்ச்சோலை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய முக்கியப் புனிதத் தலங்களுக்கு வரும் சர்வதேசப் பயணி களின் எண்ணிக்கை அதிகரிக்கும். K மருத்துவம் மற்றும் கல்வி: மதுரை ஏற்கெனவே ஒரு மருத்துவ மற்றும் கல்வி &nbsp;மையமாகத் திகழ்கிறது. சர்வதேச வான் வழித் தொடர்பு கிடைப்பதன் மூலம், தென் &nbsp;தமிழகம் சர்வதேசத் தரம் வாய்ந்த மருத்துவச் &nbsp;சுற்றுலா (Medical Tourism) மையமாக உருவெடுக்கும். நன்றியும் பாராட்டும் இந்த மகத்தான வெற்றிக்காக உழைத்த கடந்த 27 ஆண்டுகால மக்கள் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள், மற்றும் குறிப்பாக இந்தப் போராட்டத்தைத் தொய்வில்லாமல் முன்னெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சிகளுக்கு மதுரை மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர். மதுரை மக்களின் நீண்டநாள் ஏக்கத்தைத் தீர்த்து வைத்த இந்த அறிவிப்பு, தென் தமிழகத்தின் வரலாற்றில் வளர்ச்சியின் முக்கிய தொடக்கமாகக் கருதப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.