பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்க வேண்டும் மதுரை கோச்சடையில் மாதர் சங்க தெருமுனைக் கூட்டம்
28 Sept 2026, 12:11 am

பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்க வேண்டும் மதுரை கோச்சடையில் மாதர் சங்க தெருமுனைக் கூட்டம்

மதுரை, செப்.27-மதுரை மாநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அரசரடி பகுதிக்குழு சார்பில் கோச்சடையில் தெருமுனைக் கூட் நடைபெற்றது. பகுதிக்குழுத் தலைவர் ஈ.சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். ஏ.

அங்கயற்கண்ணி, எம்.தேன்மொழி, வி.ரஷ்யாதேவி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

கூட்டத்தில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெண்களுக் கான மாதாந்திர ரூ.2,500 உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத் திட் டத்தை செயல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.மேலும், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்து, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். டெங்கு, மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.லதா, மாவட்டச் செயலாளர் வி.ஜென்னியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு ஒன்றாம் பகுதிக்குழுச் செயலாளர் பி.வீரமணி வாழ்த்திப் பேசினார். பகுதிக்குழுச் செயலாளர் பி.மல்லிகா உள் ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் எஸ்.பாரதி நன்றி கூறினார்.