தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை உள்ளாட்சிகளே மேற்கொள்ளலாம்! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

4 Nov 2026, 11:10 pm
திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை  உள்ளாட்சிகளே மேற்கொள்ளலாம்! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை உள்ளாட்சிகளே மேற்கொள்ளலாம்! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

சென்னை, நவ. 4 -தமிழகம் முழுவதும் 147 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுமேலாண்மைப் பணிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ள லாம் என்று சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி, அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. அதில், 147 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குப்பை களை கையாளும் பணிகளை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள் ளும் என தெரிவித்திருந்தது.

இந்தப் பணிகளில் 616.28 கோடி மதிப்பீட்டில், 22 ஆயிரம் துப்புரவுபணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடக்கழிவுகளைக் கையாளும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி, திடக்கழிவுகளை கையாளும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்படுவர் எனக்கூறி, அரசாணைக்கு தடை விதித்து, கடந்த அக்டோபர் 30 அன்று உத்தரவிட்டிருந்தார்.

தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தலை மை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும்நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில், ஆஜரான தலைமைவழக்கறிஞர் விஜய் நாராயண், திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது என்பது மாநில அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்குஉட்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றியே இந்த திட்டத்தைஅரசு செயல்படுத்த உள்ளது. இந்தபுதிய நடைமுறையின் கீழ், பணியாளர் களுக்கான பணப்பலன்கள் உள்ளிட்ட வை நேரடியாகவே வழங்கப்படும் என தெரிவித்தார்.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள 147 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும்தூய்மைப் பணிகளை ஸ்தம்பிக்க செய்யும் வகையில் தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதால், பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோய் அபாயங்கள்உள்ளதாகவும் கூறி, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாகநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.