தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

9 Oct 2026, 1:39 am
சென்னை விரைவு செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

மயிலம்,அக்.8–விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தென்பசியார் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி ரேவதி வழக்கம் போல் வீட்டைப் பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், மர்ம நபர்கள் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள், 90 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றனர். வேலை முடிந்து வீடு திரும்பிய ரேவதி கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இந்தியன் வங்கியில் ஊழியர்கள் பற்றாக்குறை: பொதுமக்கள் அவதி

சங்கராபுரம், அக். 8 –கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி இந்தியன் வங்கியில் போதிய ஊழியர்கள் இல்லாததால், வங்கிச் சேவைகளைப் பெற வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வங்கியில் பணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க, நகை அடகு வைக்க மற்றும் நகைக்கான வட்டி செலுத்த என பல்வேறு தேவைகளுக்காக சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆனால், வங்கியில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தினால், காலை 9 மணிக்கே வந்து டோக்கன் பெற்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், காலை 10 மணிக்கு மேல் வங்கிக்கு வருபவர்களுக்கு சேவை வழங்க முடியாது என தெரிவிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் வெயிலிலும், மழையிலும் மணிக்கணக்கில் காத்திருக்கும் கிராமப்புற பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட வங்கி உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, வடபொன்பரப்பி இந்தியன் வங்கியில் கூடுதல் ஊழியர்களை நியமித்து வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற, விரைவான வங்கிச் சேவை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் விடுதியில் உணவு தரம் குறித்து கேட்ட மாணவர்களுக்கு மிரட்டல்காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சங்கராபுரம், அக். 8 –கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரியில் இயங்கி வரும் சமூக நீதி விடுதியில், தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய மாணவர்களை விடுதி காப்பாளர் மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதியில் வழங்கப்படும் உணவு சரியில்லை என மாணவர்கள் காப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விடுதி காப்பாளர், விடுதியில் உள்ள அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை போன்ற பொருட்களை மாணவர்கள் திருடுவதாகக் கூறி காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து விடுவேன் என்று மிரட்டும் உரையாடல் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், விடுதி காப்பாளர் சரிவர பணிக்கு வந்து பல மாதங்கள் ஆவதாகவும், விடுதியில் உணவு சரியில்லை என்று நியாயமாகக் கேட்கும் மாணவர்களைத் தொடர்ந்து சித்திரவதைக்கு ஆளாக்கி வருவதாகவும் அங்கு தங்கிப் பயிலும் மாணவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்கலத்தைக் கேள்விக் குறியாக்கும் வகையில் செயல்படுவதுடன், நியாமான கேள்விகளைக் கேட்கும் மாணவர்களை அச்சுறுத்தும் விடுதி காப்பாளர் மீது துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் வலுத்து வருகிறது.

6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்ராஜினாமா வழக்குசென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

சென்னை,அக், 8-கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டதால் தகுதிநீக்க நடவடிக்கை எதிர்கொண்ட அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளியன்று (அக். 9) தீர்ப்பளிக்கிறது.

முன்னதாக, தகுதிநீக்க மனு நிலுவையில் இருந்தபோது, சபாநாயகர் முறையான விசாரணை இன்றி அவசரமாக ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்குச் சபாநாயகர் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், “சுய விருப்பத்தின் பேரிலேயே பதவி விலகல் கடிதம் அளிக்கப்பட்டது. அரசியல் சாசன விதிப்படி சபாநாயகர் அதை ஏற்காமல் இருக்க முடியாது. ராஜினாமாவை ஏற்பதால் தகுதிநீக்க நடவடிக்கை தானாக ரத்தாகிவிடாது” என வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளியன்று காலை இறுதித் தீர்ப்பு வழங்குகிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்இந்தியாவில் அறிமுகம்!

சென்னை, அக்.8-விவோ இந்தியா நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ‘விவோ எக்ஸ் போல்டு 6’-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெரிய திரை வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், வழக்கமான பயன்பாடுகளையும் தாண்டி மல்டிடாஸ்கிங் பணிகளுக்கு ஏற்ற சக்திவாய்ந்த தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ‘ஆரிஜின் ஓஎஸ் 7’ இயங்குதளம், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் உயர்தர ‘ஜெய்ஸ்’ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.மேலும், இந்தியச் சந்தையிலேயே மிகப்பெரிய அளவிலான 6,900 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.