முந்தய பக்கம்

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை!

7 hours before
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஜூலை 24-ஆம் தேதி வரை வெளியிட கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களை, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், குறைத்துக் கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்ட பிரிவினருக்கு குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கப்பட்டதைப் போல, பொதுப் பிரிவினருக்கும் வழங்க வேண்டும் என கோரி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பியபோது, பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாகக் கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கொள்கை முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க ஏதுவாக வழக்கு விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram