தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வரி வசூலில் காட்டும் வேகத்தை உள்கட்டமைப்பில் காட்டுவதில்லை சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

9 Oct 2026, 12:07 am
வரி வசூலில் காட்டும் வேகத்தை  உள்கட்டமைப்பில் காட்டுவதில்லை சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

வரி வசூலில் காட்டும் வேகத்தை உள்கட்டமைப்பில் காட்டுவதில்லை சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

சென்னை, அக்.8-பொதுமக்கள் வரி செலுத்தத் தவறினால் உடனடியாகச் சேவைகளைத் துண்டிக்கும் அதிகாரிகள், மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் அதே வேகத்தைக் காட்டுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை, எல்லைஅம்மன் காலனி பகுதியில் உள்ள சாலையில் செயல்படும் சட்டவிரோத வாகன நிறுத்துமிடம் மற்றும் அனுமதியற்ற பணிமனையை (ஒர்க்‌ஷாப்) அகற்றக் கோரி சாஜு அலெக்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் ஆர். ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது:“சொத்து வரி, குடிநீர் வரி, உரிமக் கட்டணம் போன்றவற்றை மாநகராட்சி தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போகும்போது, பொதுமக்களுக்குச் சீரான சாலை வசதி, ஆக்கிரமிப்பில்லாத நடைபாதைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.பொதுமக்கள் வரி செலுத்தத் தவறினால் உடனடியாகச் சேவையைத் துண்டிக்கும் அதிகாரிகள், மேம்படுத்தப்பட்டஉள்கட்டமைப்பை வழங்குவதில் அதே வேகத்தைக் காட்டுவதில்லை.”

மேலும், சென்னை மாநகரில் ஆக்கிரமிப்பில்லாத நடைபாதைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் (அக்.26)நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.