முதல்வரை விமர்சிக்கும் உரிமை சாதாரணக் குடிமக்களுக்கும் உண்டு! ஆட்சியாளர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல! சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
3 Nov 2026, 10:45 pm

முதல்வரை விமர்சிக்கும் உரிமை சாதாரணக் குடிமக்களுக்கும் உண்டு! ஆட்சியாளர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல! சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை, நவ. 3 –“முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரணக் குடிமக்களுக்கும் உண்டு; அந்த உரிமையைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல் துறைக்கும் உண்டு!” என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை மாநகராட்சியின் 95-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி என். ரமேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்குவந்தது.அப்போது, இதுதொடர்பாக நீதிபதி என். ரமேஷ் கூறியதாவது:

பாராட்டுவது மட்டுமல்ல, விமர்சிப்பதும் உரிமையே!

மக்களாட்சியில் கேள்வி கேட்பதும், ஆட்சியாளர்களை விமர்சிப்பதும், கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமைகளாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு19(1)(a)-இன்படி, கருத்துச் சுதந்திரம் என்பது அரசைப் பாராட்டுவதற்கு மட்டுமல்லாமல், விமர்சிப்பதற்கான உரிமையையும் வழங்கியுள்ளது.ஒரு அரசியல் பேச்சு கடுமையாக இருக்கிறது, ஆட்சியாளர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்காக மட்டுமே அதைக் குற்றமாகக் கருத முடியாது. கருத்துச் சுதந்திரத்துக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(2)-இன்படி கட்டுப்பாடுகள் விதிக்கலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும்போது குற்றத்திற்கான உரிய முகாந்திரம் உள்ளதா என்பதையும் காவல் துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசியல் விமர்சனங்களுக்கு சட்ட நடவடிக்கை கூடாது!

வன்முறையைத் தூண்டுதல், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துதல் போன்ற காரணங்கள் இல்லாத நிலையில், அரசியல் விமர்சனத்துக்காக மட்டுமே சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது. அரசு உயர் பதவி வகிப்பவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்பு தன்மை இருக்கவேண்டும். விமர்சனங்களை முடக்குபவர்களாக இருக்கக் கூடாது. முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசினால், அவதூறு வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமே தவிர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யக் கூடாது. இந்த வழக்கில் கவுன்சிலர் சுதா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல் பேச்சைத் தவிர வேறு எதுவும் இல்லை. எவ்வளவு கடுமையான பேச்சாக இருந்தாலும், அந்த பேச்சு வன்முறையை தூண்டினால் மட்டுமே தண்டனை சட்ட வரம்புக்குள் வரும். சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை.முதலமைச்சர் உள்ளிட்ட பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர். ஆட்சியாளர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசியல் தலைவர்களின் நற்பெயருக்குச் சட்டப் பாதுகாப்பு உள்ளது. ஆனால், அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்கு சட்டம் வகுத்துஉள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஆளுவோரை திருப்திப்படுத்துவது காவல்துறை வேலையல்ல!

ஆட்சியாளர்களின் நற்பெயருக்கான பாதுகாப்புச் சட்டமும், குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டமும் ஒன்றுக்கொன்று முரணாகப் பயன்படுத்தப்படக் கூடாது. காவல் துறை சட்டத்தைஅமல்படுத்த வேண்டிய அமைப்பாக நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றும் அமைப்பாக மாறிவிடக் கூடாது.தமிழகத்திலும், இந்தியாவிலும் அரசியல் விவாதங்கள் சமூக ஊடகங்களிலேயே நடக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் ஐ.டி. பிரிவுகள் உள்ளன. அதில் தினந்தோறும் மாற்றுக்கட்சியினரை வசைபாடுகின்றனர். அனைத்து தரப்பில் இருந்தும் இதுசம்பந்தமாக புகார்களும் வருகின்றன. ஆளுங்கட்சிக்கு எதிரான புகார்கள் மீது உடனடி நடவடிக்கையும், ஆளுங்கட்சியினர் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறை மீதான நம்பிக்கையைப் பாதித்துவிடும்.ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகக் கருத்துப் பதிவிட்டதாகப் பொருளாதார நிபுணர் ஒருவரைக்காவல் துறை அதிகாலையில் கைது செய்தது. பின்னர், அந்தக் கருத்து அவருடையது அல்ல என்பது தெரியவந்ததும் அவரைவிடுவித்துள்ளனர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மாறாது!

அவதூறான கருத்து பதிவிடப்பட்ட சமூக வலைதளக் கணக்கைச் சரிபார்க்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன்? தவறாகச் செயல்பட்ட காவல் துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பாதிக்கப்பட்டவர் பொருளாதார அறிஞராக இல்லாமல் ஒரு சாதாரணக் குடிமகனாக இருந்தால் அவரது நிலைமை என்னவாகியிருக்கும்? பொருளாதார ஆய்வாளர் கலையரசன் கைது விவகாரத்தில் மேலிடத்தில் மன்னிப்பு கேட்டது என்பது நிகழ்ந்த தவறுக்கு பொறுப்பேற்பது ஆகாது. முதலமைச்சர் தலையிட்டதால் அவ

ருக்கு ஏற்பட்ட நிகழ்வுக்கு தீர்வாக அமையாது. புகழ்பெற்ற அறிஞர் என்பதற்காக மட்டுமே அவரது

உரிமை பாதுகாக்கப்படக் கூடாது. சாதாரணக் குடிமக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். எளிய மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்துத் தான் காவல்துறையை மதிப்பிட முடியும்.

உயர் பதவிகளை வகிப்பவர்கள் தாங்கள் விமர்சனத்திற்கும், கேலிக்கும், அவதூறுகளுக்கும் ஆளாவோம் என்று தெரிந்து தான் அந்த பொறுப்பில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஒரு கவுன்சிலர் விமர்சிப்பதால் அந்த மதிப்பு வீழாது. அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் எனக்கூறி நடவடிக்கை எடுக்கும் போது அதன் மதிப்பு குறைந்து விடும். முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரணக் குடிமகனுக்கும் உண்டு. அதே நேரத்தில், சாதாரணக் குடிமகனின் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல் துறைக்கும் உள்ளது. ஆட்சி மாறலாம், முதலமைச்சர்கள் மாறலாம். ஆனால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மட்டும் மாறாது.

இவ்வாறு நீதிபதி என். ரமேஷ் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு முன்ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.