குதிரை பேரம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு
16 Jul 2026, 9:16 pm

குதிரை பேரம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, ஜூலை 16 - சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தால், தனக்கு ரூ. 35 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாக தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகார் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இளையராஜா அளித்த புகார் மட்டுமின்றி, குதிரை பேரத்திற்கு ஆளான பிற எம்எல்ஏக்கள் தொடர்பான விவகார ங்களையும் சிபிஐ விசாரிக்க உத்தர விட வேண்டும் என அவர் கோரி யிருந்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மா திகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, வியாழனன்று இந்த மனுவை விசாரித்தது. ம

னுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, குதிரை பேரம் தொடர்ந்து நடைபெறும் நிலையில் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும், தற்போதைய அரசியல் சூழல் காரணமாகவே சிபிஐ விசாரணை கோர ப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

அப்போது, காவல்து றை விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த மனு தொடரப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆதாரங்கள் இல்லாமல் வழக்கை மாற்ற முடியாது எனக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.