‘அரசாணையே செல்லாது’ என்ற ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு இஸ்லாமிற்கு மாறிய எளிய மக்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
27 Jun 2026, 9:49 pm

‘அரசாணையே செல்லாது’ என்ற ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு இஸ்லாமிற்கு மாறிய எளிய மக்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அரசு விரைந்து மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 27- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட, சீர்மரபினர், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த - மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு வழங்கப் பட்டு வந்த இடஒதுக்கீட்டு அர சாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் விடுத் துள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது:

எளிய மக்களுக்கு பாதகமான தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஜி.ஆர். சுவாமி நாதன், பி.பி. பாலாஜி ஆகியோ ரைக் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு, 2026 ஜூன் 25 அன்று இஸ்லா மிய பிற்படுத்தப்பட்டோர் சம்பந்த மாக வழங்கி உள்ள தீர்ப்பு, இந்தியச் சமூகத்தின் யதார்த்தங்களை புறக் கணிப்பதாகவும், மதம் மாறிய எளிய ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் நலன்களுக்கு பாதகம் உருவாக்கு வதாகவும் அமைந்துள்ளது. இஸ்லாமிய மக்களின் எளிய ஒடுக்கப்பட்ட பிரிவினர் மத்தியில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அர சின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் நலத்துறை 09.03.2024 அன்று வெளியிட்டு இருந்த அரசாணை செல்லாது என மேற்கண்ட தீர்ப்பு கூறியுள்ளது.

2024 மார்ச் 9 அன்றைய அரசாணை செல்லாதா?

இந்த அரசாணையின்படி பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, சீர்மரபினர், பட்டியல் சாதி களைச் சேர்ந்தவர்களாக இருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் அனைவரும், 2007 தமிழ்நாடு பிற் படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமி யர்கள் (தனியார் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், அரசு வேலை வாய்ப்புகள் இட ஒதுக்கீடு) சட்டம்- 2007இன் அடிப்படையில் வழங்கப் பட்ட 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறத் தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சான்றிதழ் தனக்கு வழங்கப்படவில்லை என்று சமீர் அக மது என்பவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு எதிராக தொடர்ந்தி ருந்த வழக்கில் தான், 9.3.2024 அன்று வெளியிடப்பட்ட ‘அரசாணையே செல்லாது’ என்று தற்போது நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்டு இருக் கிறது.

மதமாற்றத்தின் மீது நோக்கம் கற்பிப்பதா?

“மதமாற்றங்களை ஏற்படுத்துவ தற்காக இத்தகைய நிலைப்பாட்டை எடுத்த பிறகு, இஸ்லாமிலும் சமூ கப் படிநிலைகள் உள்ளன என்று தற்போது கூறுவது நேர்மையற்ற தாகும்” என்ற நீதிமன்றத்தின் கரு த்து வழக்கின் மைய அம்சத்தை மீறிய விமர்சனம் ஆகுமென கருது கிறோம். மதம் மாறுவதும், மதப் பிரச்சாரம் செய்வதும் அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைகளாக இருக்கும் போது, அவற்றின் மீது நோக்கம் கற்பிப்பது சரியல்ல. இன்னொன்று சமூகப் படிநிலைகள் கண்கூடாக இருக்கும் போது அதை மறுதலிப்பதும் நீதியல்ல.

நீதிமன்றத்தின் அணுகுமுறை இயந்திரகதியானது

இந்த அரசாணை “இஸ்லாமி யக் கோட்பாடுகளுக்கே முரணா னது... ஒருவர் இஸ்லாமிய மதத் திற்கு மாறி விட்டார், எனில் அவர் வெறும் இஸ்லாமியர் மட்டுமே” என்றெல்லாம் நீதிமன்றம் கூறு கிறது. ஒருவர் மதம் மாறியவுட னேயே ஏற்கெனவே அனுபவித்து வரும் சமூக, பொருளாதார ஒடுக்கு முறைகளில் இருந்து விடுதலை பெற்று விடுகிறார் என்ற அணுகு முறை இயந்திர கதியானது. மதம் மாறிய பின்னரும் சாதி துரத்துகிறது என்பது இந்திய யதார்த்தம். குறிப்பிட்ட மதம் பேசுகிற சமத்து வம் அதன் இலக்காக இருக்கலாம், ஆனால், அதைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் சமத்துவம் கைவச மாகிறது என்ற அனுமானத்தில் அர சின் தலையீடுகள், நிவாரணங்கள் இருக்க இயலாது.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: மாநிலத்திற்கே அதிகாரம்!

மேலும் தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையத்தால் பரிசீலிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அடிப்படையி லேயே அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்பதும், பிற்படுத்தப் பட்டோர் பட்டியலைப் பற்றி தீர்மா னிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதைப் பயன்படுத்தி முறை யாகவே அது வெளியிடப்பட்டும் இருக்கிறது என்பது இங்கு முக்கிய மானது. ஆகவே, சென்னை உயர்நீதி மன்ற 2 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து, ஏற்கெனவே உள்ள அர சாணை அடிப்படையில் இஸ்லா மிய மதத்திற்கு மாறிய பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், பட்டியல் சாதியினர் நலன்களை முழுமையாகப் பாது காக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.