தமிழ்நாட்டில் இருந்து கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதித்த தடை ரத்து!
yesterday
<p>தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.</p><p>கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தைத் தடுக்கவும் கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழ்நாடு அரசு கனிமப் போக்குவரத்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்லத் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.</p><p>தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரியும் மது பிரேமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திருத்த விதிகளுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்; உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்களை எங்கு விற்பனை செய்வது என்பதை உரிமையாளர்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரி இருந்தார்.</p><p>இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, மனுதாரரின் வாதங்களை ஏற்று, தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து, சேமிப்பு தடுப்பு திருத்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்து, இந்த தடையை ரத்து செய்தது.</p>
