தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் பள்ளி கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிடும் உத்தரவுக்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

5 Jun 2026, 12:38 pm
தனியார் பள்ளி கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிடும் உத்தரவுக்கு தடை இல்லை -  சென்னை உயர்நீதிமன்றம்

கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்றும், பள்ளிகள் வெளிப்படையாக வசூலிக்கும் தொகை என்பதால் அதன் விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட தகவல்களுக்குக் கூட பொதுநலன் கருதி அவற்றை வெளியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, கல்விக் கட்டண விவரங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலன் சார்ந்தவை என்பதால் அவற்றை வெளிப்படையாக அறிவிப்பதில் தடையில்லை எனக் கூறினார்.

இதனையடுத்து, தனியார் பள்ளி கல்வி கட்டணங்களை அறிவிப்பு பலகையில் வெளியிடும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.