முந்தய பக்கம்

தெருநாய்கள் பிரச்சனை: தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

yesterday
தெருநாய்கள் பிரச்சனை: தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய இரு அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெரு நாய்கள் கடியால் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பான வழக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இவ்வழக்கில் மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

உச்சநீதிமன்றம் அளித்த அந்த உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆராய, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ்வழக்கில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram