முந்தய பக்கம்

கல்விக் கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்

6 Jun 2026, 9:16 pm
கல்விக் கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்

கல்விக் கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 6- தனியார் பள்ளிகள் பெறும் கல்விக் கட்டணங்கள் கருப்புப் பணம் இல்லை என்ற காரணத்தை கூறி அவற்றை அறி விப்பு பலகையில் வெளியிட மறுக்க முடியாது என சென்னை உயர் நீதி மன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணை யம் கடந்த மே 25 அன்று, அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ண யித்த கல்விக் கட்டண விவரங்களை கட்டாயமாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என உத்தர விட்டிருந்தது.

அதன்படி, தனியார் பள்ளிகள் இயக்குநரகம் ஜூன் 1 அன்று சுற்ற றிக்கை அனுப்பியது.

இந்த உத்த ரவை எதிர்த்து, அகில இந்திய தனி யார் கல்வி நிறுவனங்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தண்ட பாணி, தகவல் உரிமைச் சட்டத்தில் விலக்களிக்கும் பிரிவிலும் கூட பொது நலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, கல்விக் கட்டணம் என் பது கருப்புப் பணம் அல்ல என்பதால் அதன் விவரங்களை பொதுவெளி யில் சொல்வதற்கு தடையில்லை என்றும் தெரிவித்தார்.

வழக்கு குறித்து ஜூன் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழ் நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசார ணையையும் நீதிபதி ஒத்திவைத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram