கடத்தல் கும்பலின் பொருளாதார அடித்தளத்தை முறியடித்தால்தான் போதை இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும்
7 May 2026, 9:42 pm
<p><strong>கடத்தல் கும்பலின் பொருளாதார அடித்தளத்தை முறியடித்தால்தான் போதை இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும்</strong></p><p>மதுரை, மே 7- போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத் தக்கவை என்றும், இனிவரும் காலங்க ளில் அனைத்து போதைப்பொருள் தடுப்பு வழக்குகளிலும் குற்றவாளி களின் சொத்துக்களை கண்டறிந்து பறி முதல் செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள் தங்களது தண்டனையை இடைநிறுத்தி ஜாமீனில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுக்கள், நீதி பதி புகழேந்தி முன்னிலையில் ஒருங்கி ணைத்து விசாரிக்கப்பட்டன. விசாரணையின் போது நீதிபதி தெரி வித்ததாவது: 10 ஆண்டுகளில் 12 ஆயிரம் வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்க ளில் மட்டும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமி ழகத்தில் பதிவாகும் மொத்த வழக்கு களில் 50 சதவீதத்திற்கும் அதிகமா னவை இந்த 3 மாவட்டங்களில் இருப் பது கவலைக்குரியது. இவ்வழக்கு களில் சுமார் 5,603 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்டுள்ளதும், ஒழுங்க மைக்கப்பட்ட கடத்தல் வலையமைப்பு செயல்படுவதை காட்டுகிறது. அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தமிழக அரசு போதைப் பொருள் ஒழிப்பில் ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையை கடைப்பிடித்து வரு கிறது. விழிப்புணர்வு கையேடுகள் வெளியீடு, ‘மல்கானா’ வசதிகள் அமைத்தல், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை பாது காப்பாக கையாளுதல் மற்றும் அழிக் கும் நடைமுறைகள் குறித்து காவல் துறை தலைமையகம் மற்றும் உள் துறை பல்வேறு சுற்றறிக்கைகள் வெளி யிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை நீதிமன்றம் பாராட்டுகிறது. பிற மாநிலங்களில் இருந்து கடத்தல் தமிழகத்தில் கஞ்சா பயிரிடுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் தற்போது ஆந்தி ரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரிட்டு, அங்கிருந்து தமிழகத்திற்கு கடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகள் பற்றாக்குறை போதைப்பொருள் தடுப்பு பிரி வில் மாநிலம் முழுவதும் வெறும் 12 டிஎஸ்பிக்கள் மற்றும் 16 ஆய்வா ளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும், சைபர் குற்றப்பிரிவு அமைத்து ஆன்லைன் தொடர்புகளை கண்காணிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய உத்தரவுகள் அனைத்து போதைப்பொருள் வழக்குகளிலும் நிதி விசாரணை கட்டா யம்; குற்றவாளிகளின் சொத்துக்களை கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண் டும்; பேருந்து, ரயில்களில் திடீர் சோத னைகளை அதிகரிக்க வேண்டும்; தமிழ் நாடு சிறப்பு போலீஸ் படை உதவி பயன்படுத்த அனுமதி; கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சந்தேகநபர் கண்காணிப்பு; ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். “கைது மட்டும் போதாது” “காவல்துறை வெறும் கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், கடத்த லின் பின்னணியில் உள்ள பணப் பரி வர்த்தனைகள் மற்றும் சொத்து குவிப்பு களை கண்டறிய வேண்டும். 2023-24 ஆம் ஆண்டில் 72 வழக்குகளில் மட்டுமே நிதி விசாரணை நடைபெற்றுள்ளது. இது போதுமானதல்ல. வெறும் கைதுகளால் மட்டும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியாது. கடத்தல் கும்பலின் பொருளாதார அடித்தளத்தை முறி யடித்தால்தான் போதை இல்லாத சமூ கத்தை உருவாக்க முடியும்” என நீதிபதி புகழேந்தி வியாழனன்று தெரிவித்தார்.</p>
