காவல்துறையினருக்கு எதிராக வழக்கு தொடர முன்அனுமதி அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு
11 Jun 2026, 9:44 pm
<p><strong>காவல்துறையினருக்கு எதிராக வழக்கு தொடர முன்அனுமதி அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு</strong></p><p>மதுரை, ஜூன் 11- தமிழகத்தில் அனைத்து நிலை காவல்துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு தொடரவும் அரசின் முன் அனுமதி அவசியம் என கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அர சாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த விவே கானந்தன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் 218(2)-ஆவது பிரிவின்படி, மத்திய ஆயு தப்படை காவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வழக்குத் தொ டர அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசா ணையின் மூலம் இந்த நடைமுறை தமிழக காவல்துறையின் அனைத்து நிலை பணியாளர்களுக்கும், அவர்கள் எங்கு பணியாற்றினாலும் பொருந்தும் வகையில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. சாதாரண காவல் பணியில் உள்ளவர்களுக்கும் இத்தகைய பாதுகாப்பு வழங்க முடியாது. நிர்வாக உத்தரவு மூலம் மத்திய சட்டத்தின் நடைமுறையை மாற்றுவது அரசியலமைப்புக்கு முரணானது. மேலும், இது நீதித் துறையின் உத்தரவுகளை மீறி நிர்வாகத்தின் மூலம் சட்டத்தை மாற்ற முயற்சிப்பதாகும். எனவே, அனைத்து நிலை காவல் துறையினருக்கு எதிராக வழக்குத் தொடர அரசின் முன் அனுமதி அவசி யம் எனக் கூறி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், அந்த அரசா ணையை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கள், வழக்கு தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசார ணையை ஒத்திவைத்தனர். </p>
